காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்டை ரத்து செய்யாவிட்டால் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம்: இளங்கோவன் அறிவிப்பு

காங்கிரஸ் எம்.பி.க்கள் சஸ்பெண்டை ரத்து செய்யாவிட்டால் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம்: இளங்கோவன் அறிவிப்பு
Updated on
1 min read

காங்கிரஸ் எம்.பி.க்களின் இடைநீக்கத்தை ரத்து செய்யா விட்டால் நாளை (ஆகஸ்ட் 7) சென்னை வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் 25 காங் கிரஸ் உறுப்பினர்கள் இடைநீக் கம் செய்யப்பட்டதை கண்டித் தும், தமிழகத்தில் முழு மது விலக்கை அமல்படுத்த வலியுறுத் தியும் சென்னை அண்ணா சாலை யில் உள்ள தலைமை அஞ்சல் நிலையம் முன்பு நேற்று ஆர்ப் பாட்டம் நடத்தப் போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்திருந் தது. அங்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால் அண்ணா சாலை தர்கா அருகே காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதாவது:

காங்கிரஸ் ஆட்சியின்போது எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு உரிய மதிப்பளிக்கப்பட்டது. ஆனால், இப்போது பெரும்பான்மை இருக் கிறது என்பதற்காக அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளனர். நாடாளுமன்றத்தில் 25 காங்கிரஸ் எம்.பிக்களின் இடைநீக்கத்தை உடனடியாக ரத்து செய்யவில்லை எனில் வரும் 7-ம் தேதி (நாளை) சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம்.

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தமிழகத்தில் உடனடி யாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். மதுக்கடையை மூடக்கோரி போராட்டம் நடத்திய மாணவ, மாணவிகளிடம் காவல் துறையினர் அநாகரிகமாக நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது. காங்கிரஸ் கட்சிக்கு வன்முறை யில் நம்பிக்கை இல்லை. மதுவிலக்குக்காக அமைதியான முறையில் போராடுவோம்.

இவ்வாறு இளங்கோவன் பேசினார்.

சென்னை அண்ணா சாலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக இளங்கோவன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரிஅனந்தன், அகில இந்திய செயலாளர்கள் சு.திருநாவுக்கரசர், ஜெயக்குமார் உள்ளிட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக அண்ணா சாலையில் சுமார் 1 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in