கிரகண நகர்வை உலக்கை மூலம் உணர்ந்த கிராம மக்கள்

கிரகண நகர்வை உலக்கை மூலம் உணர்ந்த கிராம மக்கள்
Updated on
1 min read

சூரிய கிரகணத்தை விஞ்ஞான உபகரணங்களை கொண்டு நேற்று நகர்புறங்களில் பார்க்க பல்வேறு அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தன. ஆனால் கிராமங்களில் கிரகணத்தை பார்க்க பல்வேறு உத்திகளைக் கையாண்டனர்.

சிதம்பரம்நகரை ஒட்டியுள்ள சரஸ்வதி அம்மாள் நகரில் உள்ள சிறுவர்கள் அவர்கள் வீட்டில் இருந்த பழைய எக்ஸ்ரே ஷீட்டை பயன்படுத்தி சூரிய கிரகணத்தை பார்த்தனர். வெல்டிங் வேலை செய்ய பயன்படுத்தப்படும் வண்ணக் கண்ணாடிகள், கருப்பு கண்ணாடிகளை கொண்டும் கிரகணத்தை பார்த்தனர். இந்த முறைகளை பின்பற்றி பார்க்கலாம் என வெளியூரில் வசிக்கும் தங்கள் உறவினர்களுக்கும் தெரிவித்தனர்.

திட்டக்குடியில் கோயில் எதிர்புறம் பித்தளை தாம்பாளத் தட்டில் மஞ்சள் நீர் ஊற்றி, கிரகணம் தொடங்கும் போது அதில் உலக்கையை நேராக நிற்க வைத்தனர்.

கிரகணம் சூரியனை கடந்த பிற்பகல் 11.28 மணி வாக்கில் உலக்கை தானாக கீழே விழந்ததாகவும், காணொளி மூலம் பதிவுசெய்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

இதுகுறித்து திட்டக்குடியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் கூறுகையில், "பண்டையை காலத்தில் சூரிய கிரகணத்தை, சந்திர கிரகணத்தை காண முடியும், அவை கடக்கும் நேரத்தை அறிய முடியாது. உலக்கையை செங்குத்தாக நிற்கவைத்து, பூமியின் சுழற்சிகேற்ப உலக்கை நின்று, சாய்வதைக் கொண்டு கிரகணம் கடந்துவிட்டதாக உணருவர். அதை தற்போது செய்து பார்த்தோம்" என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in