

விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்த சென்னையைச் சேர்ந்த இளைஞரை விருதுநகர் போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள ராமகுடும் பன்பட்டியைச் சேர்ந்தவர் கருப் பசாமி. இவருக்கு சென்னை விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சென்னை ஆதம்பாக்கதாதைச் சேர்ந்த பத்மநாபன் என்பவர் நேரிலும், வங்கி மூலமும் ரூ.2.60 லட்சம் பணம் பெற்றுள்ளார். பின்னர் குறிப்பிட்டபடி கருப்பசாமிக்கு வேலை வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை.
இதுகுறித்து வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் கருப்ப சாமியின் தந்தை வேல்முருகன் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து பத்மநா பனை நேற்று கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகை யில், சென்னை காஞ்சிபுரம், திண்டிவனம், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, விருதுநகர் உள் ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களிடம் சென் னை விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பத்மநாபன் பல லட்சம் முறைகேடு செய்துள்ளார்.
இவர் மீது ஏதேனும் புகார் இருந்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் 94981 83227 என்ற செல்போன் எண்ணில் தெரிவிக்கலாம் என்று கூறினர்.