Last Updated : 27 Dec, 2019 08:06 AM

 

Published : 27 Dec 2019 08:06 AM
Last Updated : 27 Dec 2019 08:06 AM

ஜெ. சொத்துகளுக்கு சசிகலா சொந்தம் கொண்டாடும் விவகாரம்; ஒப்பந்த ஆவணங்கள் கேட்டு வழக்கு தொடர்வேன்: ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா திட்டவட்டம்

சென்னை

கொடநாடு எஸ்டேட் உள்ளிட்டவை தனக்கே சொந்தம் என சசிகலா விளக்கம் அளித்துள்ள நிலையில், பங்குதாரர் ஒப்பந்த ஆவணங்களைக் கேட்டு வழக்கு தொடர உள்ளதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டு இறுதியில் சசிகலா மற்றும் உற வினர் வீடுகள், ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வேதா நிலையம், சசிகலா நிர்வாகத்தில் உள்ள பல்வேறு அலுவலகங்களில் வரு மானவரித் துறை சோதனை செய் தது. இந்த சோதனையில், பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ஆவணங்களை ஆய்வு செய்த வரு மானவரித் துறையினர், பண மதிப் பிழப்பு நடவடிக்கையின்போது, ரூ.1,900 கோடி பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் நடந்துள்ளதைக் கண்டறிந்தது.

சசிகலா விளக்கம்

இதில், சொத்துகள் வாங்கப் பட்டதாகவும், கடன் வழங்கப் பட்டதாகவும் குறிப்பிட்ட வருமானவரித் துறை, இது தொடர்பாக சிறையில் உள்ள சசிகலாவிடம் விளக்கம் கோரியது.

இதற்கு கடந்த 11-ம் தேதி சசிகலாவின் ஆடிட்டர் விளக்க கடிதம் ஒன்றை வருமானவரித் துறைக்கு அனுப்பியுள்ளார். இதில், கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட ஜெயலலிதாவுடன் பங்குதாரராக இருந்த பல்வேறு நிறுவனங்கள், 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா மறைவுக்குப்பின், ஒப்பந்தம் முடிவடைந்துவிட்டதால் தனக்கே சொந்தம். அந்த நிறுவ னங்கள், வர்த்தகம் மற்றும் இதர வகைகளில் இருந்தே தனக்கு வருமானம் வருகிறது என்று குறிப்பிட்டிருந்தார். சசிகலாவின் இந்த விளக்கக் கடிதம் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

இந்நிலையில், ஜெயலலிதா வின் அண்ணன் மகளும், ஜெய லலிதாவின் வாரிசாக தன்னைக் குறிப்பிட்டு, சொத்துகளுக்கு உரிமை கோரிவரும் ஜெ.தீபா, சொத்து தொடர்பான சசிகலாவின் விளக்கம் குறித்து கூறியதாவது:

சசிகலாவின் விளக்கம் தொடர் பாக நாங்கள் நீதிமன்றத்தைக் கட்டாயம் நாடுவோம். ஜெயலலி தாவின் மரணத்தை தொடர்ந்து பல்வேறு முரண்பட்ட கருத்துகள் வெளியாகியிருப்பதால், பங்கு தாரர் தொடர்பான ஆவணங்களை கோர்ட்டில் சசிகலா சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பாக, பங்குதாரர் ஒப்பந்தங்களைக் காட்ட வேண்டும்.

விவரங்களை தரவேண்டும்

ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகள் என்ற அடிப்படையில், ஏற்கெனவே 2 வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளோம். அந்த வழக்கு களின் தீர்ப்பை எதிர்நோக்கி யுள்ளோம். ஆனால், ஜெயலலி தாவுக்கு எந்த ஒரு சட்டப்பூர்வ வாரிசுகளும் இல்லை என்பது போல, தற்போது இந்த அறிக் கையை சசிகலா வெளியிட்டுள் ளார்.

எந்தெந்த நிறுவனங்களில் அவர் கள் பங்குதாரர்களாக இருந்தார் கள். அவற்றின் விவரம் என்ன, சொத்து மதிப்பு என்ன, தற்போதைய நிலை என்ன என்பது குறித்து அவர் விளக்க வேண்டும். இது தொடர் பாக நிச்சயம் உயர் நீதிமன்றத்தில் நான் வழக்கு தொடர்வேன். இவ்வாறு ஜெ.தீபா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x