மாநிலத்தில் முதல் முறையாக உள்ளாட்சி ‘தேர்தல் செயலி’

மாநிலத்தில் முதல் முறையாக உள்ளாட்சி ‘தேர்தல் செயலி’
Updated on
1 min read

ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாநிலத்திலேயே முதல் முறையாக தேர்தல் தொடர் பான தகவல்கள், சேவைகளை உள்ளடக்கி தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் ‘தேர்தல் செயலி’யை உருவாக்கி வெளியிட்டுள்ளது.

இந்தச் செயலியில் வாக் காளர், வேட்பாளர், தேர்தல் பணியாளர் என பயனாளர் தேர்வு செய்துகொள்வதற்காக என 3 பகுதிகளில் விவரங்கள் தனித் தனியே கொடுக்கப்பட்டுள்ளன.

கடமை அறிய, புகார் செய்ய

வாக்காளர் என்ற பகுதியில் வாக்காளர் பெயரை வாக்காளர் பட்டியலில் சரிபார்த்துக் கொள்ளவும், வாக்குச்சாவடியை அறியவும், வாக்காளர் பட்டியலை பதிவிறக்கம் செய்துகொள்ளவும் வசதிகள் தரப்பட்டுள்ளன. வாக்காளர் கடமைகள் பட்டிய லிடப்பட்டுள்ளன. புகார்களை தெரிவிப்பதற்கான கட்டணமில்லா தொலைபேசி எண்களும் தரப் பட்டுள்ளன.

நடத்தை விதிமுறைகள்

வேட்பாளர் என்ற பகுதியில் வேட்பாளர்களுக்கான படிவங் கள் மற்றும் கையேடு இணைக் கப்பட்டுள்ளன. தேர்தல் மாதிரி நடத்தை விதிமுறைகள் தரப்பட் டுள்ளன. இது தவிர அவ்வப்போது வெளியிடப்படும் அறிவிப்புகளும், செய்திகளும் இணைப்பின் வழியே வழங்கப்படுகின்றன.

தேர்தல் பணியாளர் என்ற பகுதியில், வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான கடமை களும், அவர்களுக்கான பணிகளும், சுருக்கமாக பொருத்தமான தலைப்பின் கீழ் விளக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி தலைமை அலு வலர்களுக்கான கையேடு, காணொலிகள் மற்றும் தேர்தல் அலுவலர்களின் தொடர்பு எண்கள் தரப்பட்டுள்ளன. தேவை யான படிவங்கள் பிடிஎஃப் வடிவில் இணைக்கப்பட்டுள்ளன.வாக்குப்பெட்டியை அறிவோம் என்ற பிரிவில் வாக்குப்பெட்டியைக் கையாளும் வழிமுறைகள் விளக்கப்பட்டுள்ளன. அவ்வப் போது செய்திகளும், அறிவிப்பு களும் இந்தச் செயலிக்கு பகிரப்படுகின்றன. தேர்தல் பணியில் ஈடுபட்டிருப்பவர்களின் செல்போனில் தேர்தல் சமயத்தில் அவசியம் இருக்க வேண்டிய செயலியாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தச் செயலி, தற்போது கூகுள் ட்ரைவ் இணைப்பில் இருந்து வாட்ஸ் அப் வாயிலாகப் பகிரப்படுகிறது. ப்ளே ஸ்டோர் இணைப்பு கிடைத்தவுடன் விரைவில் பகிரப்படும் என மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in