திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர்களை குழப்பும் அளவுக்கு சுவர்களில் நிரம்பி வழியும் போஸ்டர்கள்

திண்டுக்கல் அருகே பாலகிருஷ்ணாபுரம் கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதி சுவரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்.
திண்டுக்கல் அருகே பாலகிருஷ்ணாபுரம் கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதி சுவரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்.
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்டத்தில் உள் ளாட்சித் தேர்தலையொட்டி பிரச் சாரம் மும்முரம் அடைந்துள்ளது. இந் நிலையில், கிராமப்புறங்களில் ஒரே சுவரில் பல்வேறு சின்னங் களில் போட்டியிடும் வேட்பாளர்கள் போஸ்டர்களை ஒட்டி இருப்பதால் வாக்காளர்கள் குழம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்ட கிராமங் களில் ஆட்டோவில் ஒலி பெருக் கியைக் கட்டிக் கொண்டு வேட்பாளர் பெயர், சின்னம் ஆகிய வற்றை கூறி வலம் வருகின்றனர்.

தற்போது முதன்முறையாக 50 சதவீத இட ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளதால் பெண்கள் அதி கமானோர் களமிறங்கி உள்ளனர். பலர் புதுமுகங்களாக உள்ளதால் தங்கள் குடும்ப சகிதமாக வாக்குச் சேகரித்து வருகின்றனர்.

இதற்காக ஒட் டப்பட்ட போஸ்டர்களில் வேட்பாளர் களோடு அவர்களது கணவர் படங்களும் இடம் பெற்றுள்ளன. பெண்கள் குழுவினராக வீடு வீடாகச் சென்று ஓட்டு வேட்டை நடத்தி வருகின்றனர். கிராமங்களில் சாலையோரம் உள்ள வீடுகளின் சுவர்கள், காம்பவுண்ட் சுவர்கள், அரசு சுவர்கள் என பாகுபாடில்லாமல் எங்கு திரும்பினாலும் போஸ்டர் மயமாகக் காட்சி தருகிறது.

கிராம ஊராட்சி வார்டில் போட்டியிடும் பலர், ஊராட்சித் தலைவர் பதவி வேட்பாளர்கள், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் என பலரும் தங்கள் சின்னங்களுடன் ஒரே சுவரில் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர். மீண்டும், மீண்டும் வாக்காளர் வீடுகளின் கதவைத் தட்டி வேட்பாளர்கள் வாக்கு கேட் டாலும் மக்கள் சலிக்காமல் இன்மு கத்துடன் அவர்களை அனுப்பி வைக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in