

மதுரை கிராமங்களில் உள்ளாட்சித் தேர்தல் களைகட்டியுள்ளது. முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 6 ஊராட்சி ஒன்றியங் களில் இன்று மாலையுடன் பிரச் சாரம் நிறைவடைகிறது.
மதுரை மாவட்டத்தில் 23 மாவட்ட ஊராட்சிக் கவுன்சிலர்கள், 13 ஊராட்சி ஒன்றியங்களில் 214 கவுன்சிலர்கள், 420 ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கும், 3,273 ஊராட்சி உறுப்பினர் பதவிக ளுக்கும் டிச.27, 30 ஆகிய தேதி களில் இரண்டு கட்டங்களாகத் தேர் தல் நடைபெற உள்ளது.
மாவட்ட ஊராட்சிக் கவுன்சிலர் பதவிகளுக்கு 181 பேர், ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலர் பதவிகளுக்கு 1,555 பேர், ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கு 2,467 பேர், ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 8,169 பேர் போட்டியிடுகின்றனர்.
மேலூர், கொட்டாம்பட்டி, வாடிப்பட்டி, அலங்காநல்லூர், மதுரை கிழக்கு, மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியங்களில் டிச.27-ம் தேதியும், திருப்பரங்குன் றம் உட்பட 7 ஊராட்சி ஒன்றி யங்களில் டிச. 30-ம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது.
நாளை மறுநாள் முதல் கட்டத் தேர்தல் நடைபெறும் 6 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றிய உறுப்பினர் பதவிகளுக்கு 695 பேரும், ஊராட்சித் தலைவர் பதவி களுக்கு 1,119 பேரும், ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 3,804 பேரும் போட்டியிடுகின்றனர்.
முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இதனால் வேட்பாளர்கள் இறுதி கட்டப் பிரச்சாரத்தை தீவிரப் படுத்தியுள்ளனர்.
வேட்பாளர்கள் தங்களது ஆதர வாளர்களுடன் தனியாகவும், வேட்பாளர்களின் குடும்பத்தினர் தனியாகவும் பிரச்சாரம் செய்கி ன்றனர். வேன்கள், ஆட்டோக்களில் ஒலிபெருக்கி மூலம் தனிப் பிரச் சாரம் நடைபெறுகிறது.
தேர்தலில் வெற்றி பெற்றால் என்ன செய்வோம் என்பதை ஒலிப்பதிவு செய்து வாகனங்கள் மூலம் ஒலிபரப்பி வருகின்றனர்.
சின்னங்களின் மாதிரிப் பொருட்களைப் பரிசாக வழங் கியும், காலில் விழுந்தும், வாக் காளர்களுக்கு வெற்றிலை வழங்கியும் ஓட்டு சேகரிக்கின்றனர்.
ஊராட்சித் தலைவர் பத விக்குப் போட்டியிடுவோர், தங்கள் அணி சார்பில் வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டி யிடுவோரையும், தங்கள் அணி சார்பில் ஒன்றியம் மற்றும் மாவட்டக் கவுன்சிலர் பதவி களுக்கு கட்சி சின்னங்களில் போட்டியிடுவோரையும் உடன் அழைத்துச் செல்கின்றனர்.
பல இடங்களில் வேட்பா ளர்களுக்கு ஆரத்தி எடுத்தும், சால்வை அணிவித்தும் மக்கள் வர வேற்பு அளிக்கின்றனர். பதிலுக்கு வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு சால்வை அணிவிக்கின்றனர். சுவர் விளம்பரம், போஸ்டர் பிரச்சாரம், இரவில் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு கேட்பது என கிராமங்களில் பொதுத் தேர்தலை மிஞ்சும் அளவுக்கு உள்ளாட்சி தேர்தல் விழா களைகட்டி உள்ளது.