

மதுரையை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரே நாளில் மதுரை, டெல்லியில் பிறந்ததாக அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் பிறப்பு சான்றிதழ்கள் வழங்கியுள்ளன. இந்த விவரத்தை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மதுரை பாஸ் போர்ட் அதிகாரி தெரிவித்தார்.
மதுரை கோச்சடையை சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் அமெரிக்காவின் கேம் பிரிட்ஜ் பல்கலைக்கழக மருத்துவ மனையில் ஆண் செவிலியர் பணியில் சேர்வதற்காக, பாஸ் போர்ட் கேட்டு 2013-ம் ஆண்டில் விண்ணப்பித்தார். அவருக்கு பாஸ் போர்ட் மறுக்கப்பட்ட நிலையில், அவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருந்த தாவது: பாஸ்போர்ட் கேட்டு 2013-ல் விண்ணப்பித்தேன். ஆனால் நான் மைனராக இருந்தபோது 2001-ல் பாஸ்போர்ட் பெற்றதாகவும், அந்த பாஸ்போர்ட்டை ஒப்படைத் தால்தான் புதிய பாஸ்போர்ட் தர முடியும் என பாஸ்போர்ட் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நான் மைனராக இருந்தபோது என் தந்தை எனக்கு பாஸ்போர்ட் வாங்கிய விவரம் எனக்குத் தெரி யாது. என் தாயார் 2001-ம் ஆண்டில் விவாகரத்து பெற்றார். பின்னர் என் தந்தை இறந்துவிட்டார். இதனால் அந்த பழைய பாஸ்போர்ட் எங்கிருக்கிறது என்பதை கண்டு பிடிக்க முடியவில்லை. பழைய பாஸ்போர்ட்டை கண்டுபிடிக்க முடியவில்லை என மதுரை விளக் குத்தூண் காவல் நிலையத்தில் சான்றிதழ் பெற்றுள்ளேன். அதன் பிறகும் பாஸ்போர்ட் தர மறுக்கின்றனர் எனக் கூறப்பட் டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.மனீஸ்வரராஜா தாக்கல் செய்த மனுவில், மனுதாரர் பெயரில் 2001-ல் சென்னையில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. அந்த பாஸ்போர்ட் பெற டெல்லியில் பிறந்ததாக டெல்லி உள்ளாட்சி அமைப்பில் பெறப்பட்ட பிறப்பு சான்றிதழை அளித்துள்ளார்.
2013-ம் ஆண்டில் விண்ணப் பித்தபோது, மதுரை மாநகராட் சியில் பெற்ற பிறப்பு சான்றிதழை தாக்கல் செய்துள்ளார். இரண்டு பிறப்பு சான்றிதழ்களிலும் மனு தாரர் 9.2.1991-ல் பிறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரே நாளில் இரு இடங்களில் பிறந்ததாக சான்றிதழ் வழங்கப் பட்டது தொடர்பாக அதிகாரி களுக்கு கடிதம் அனுப்பியுள் ளோம். இன்னும் பதில் வரவில்லை என்றார். இதை யடுத்து தீர்ப்பை தேதி குறிப் பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.