குழந்தைகள் ஆபாச பட விவகாரம்: இணையதள மையங்களில் போலீஸார் சோதனை

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்: இணையதள மையங்களில் போலீஸார் சோதனை
Updated on
1 min read

குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள் பதிவிறக்கம் செய்ததாக கிடைத்த தகவலின்பேரில் சில இணையதள மையங்களில் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர்.

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு உருவாக்கப்பட்டு, அதன் ஏடிஜிபியாக எம்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து குழந்தைகள் தொடர்பான ஆபாச படம் பதிவிறக்கம் செய்தவர்கள், அதை விற்றவர்கள், மற்றவர்களுக்கு அனுப்பியவர்கள் மீது முதல்கட்டமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, குழந்தைகள் தொடர்பான ஆபாச படத்தை பதிவிறக்கம் செய்ததாக சென்னையைச் சேர்ந்த 72 வயதான மோகன் என்ற நபரை போலீஸார் நேற்று கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில், சென்னையில் சில இணையதள மையங்களில் போலீஸார் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

“ஆபாச படம் பார்ப்பது சட்டப்படி குற்றமல்ல, ஆனால் குழந்தைகளைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட ஆபாச படத்தை பார்ப்பது குற்றம். குழந்தைகள் தொடர்பான ஆபாச படம் பார்த்தவர்களின் ஐபி முகவரியை வைத்து யார் யாரெல்லாம் பார்த்தார்கள் என்பதை லிஸ்ட் எடுத்து விரைவில் நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். 18 வயதுக்கு கீழுள்ளவர்களை பயன்படுத்தி எடுக்கப்பட்ட ஆபாச படங்களை பார்ப்பதோ, அதை ஷேர் செய்வதோ, டவுன்லோட் செய்வதோ, அப்லோட் செய்வதோ சட்டப்படி குற்றம். அவர்கள் மீது போக்சோ சட்டத்தின்கீழ் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். 3 முதல் 8 ஆண்டுகள் சிறைதண்டனை கிடைக்கும்” என்று ஏடிஜிபி எம்.ரவி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in