Last Updated : 24 Dec, 2019 04:50 PM

 

Published : 24 Dec 2019 04:50 PM
Last Updated : 24 Dec 2019 04:50 PM

மதுரையில் திமுக ஊர்வலத்துக்கு காவல்துறை அனுமதி மறுப்பு: நீதிமன்றத்தை நாட கட்சி முடிவு

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக திமுக ஏற்பாடு செய்திருக்கும் ஊர்வலத்துக்கு காவல் துறையின் அனுமதி மறுக்கப்பட்டாலும், நீதிமன்றம் மூலம் அனுமதியைப் பெறுவோம் என மதுரை நகர திமுக பொறுப்பாளர் கோ. தளபதி நம்பிக்கை தெரிவித்தார்.

சென்னை போன்று மதுரை நகரிலும் குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி டிச.31ல் ஊர்வலம் நடத்த திமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக மதுரை நகர் பொறுப்பாளர் கோ. தளபதி உட்பட நிர்வாகிகள் காவல்துறையின் அனுமதியை பெறுவதற்காக ஆணையர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் ஆணையரை நேரில் சந்தித்து, அனுமதிக்கான கடிதம் ஒன்றை அளித்தனர்.

இதன்பின், வெளியேவந்த கோ. தளபதி உள்ளிட்ட நிர்வாகிகள் கூறியது:

குடியுரிமைச் சட்டத்தை கண்டித்தும், திரும்ப பெற வலியுறுத்தியும் மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து யானைக்கல் அருகிலுள்ள ஓபுளாப்படித்துறை வரை டிச.31ல் ஊர்வலம் நடத்த உள்ளோம்.

இதற்கு முறையாக காவல் துறையின் அனுமதியை பெற காவல் ஆணையரை அணுகினோம். போக்குவரத்து நெருக்கடியை காரணம் காட்டி அனுமதி வழங்க இயலாது என தெரிவித்துவிட்டார். எங்களுக்கு மட்டுமே இது போன்ற காரணங்களைக் கூறி, அனுமதி மறுக்கப்படுகிறது.

ஆளுங்கட்சியினர் நடத்தும் ஊர்வலம், பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இன்றுகூட, எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி அதிமுகவினர் போக்குவரத்துக்க இடையூறாக ஊர்வலம் சென்றனர். அவர்களை போலீஸார் கண்டு கொள்வதில்லை. இருப்பினும், ஊர்வலத்துக்கு நீதிமன்றம் மூலம் உரிய அனுமதியை பெறுவோம், என்றனர்.

இதற்கிடையில் காவல் ஆணையரிடம் மேலும், ஒரு புகார் மனுவை திமுகவினர் அளித்தனர். அதில்,‘‘ மதுரை மூன்றுமாவடி பகுதியில் டிச., 22-ல் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற திமுக தலைவர் முக.ஸ்டாலின் சென்றபோது, புதூர் அருகே எங்களது தலைவரை தாக்கும் நோக்கில் பாஜகவைச் சேர்ந்த பரசுராம்பட்டி சங்கையா தலைமையில் 6 பேர் காரை வழிமறிக்க முயன்றனர்.

அவர்களை பாதுகாவலர் கள் தடுத்து நிறுத்தியதால் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. அவர்கள் 6 பேர் மீதும் நட வடிக்கை எடுக்கவேண்டும்,’’ என, குறிப் பிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x