திருமாவளவன் மீது முதல்வர் தனிப் பிரிவில் பெண் புகார்

திருமாவளவன் மீது முதல்வர் தனிப் பிரிவில் பெண் புகார்
Updated on
1 min read

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தன்னை ஏமாற்றி விட்டதாக கோவையை சேர்ந்த கவிதா என்ற பெண் முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளார்.

கவிதா அளித்துள்ள மனு: கோவையில் எஸ்டிகேஎஸ் என்ற பள்ளி நடத்தினேன். ஜெம் ஜுவல் லரி விஜயகுமார், புல்லியன் ஜுவல் லரி சீனிவாசன் மற்றும் கார்த்தி, ஜெயந்தி ஆகியோர் என் சொத்து களை அபகரித்துவிட்டார்கள் ஏற் கெனவே இது பற்றி புகார் அளித் துள்ளேன். திருமாவளவன் என்னி டம் பழகிவிட்டு திருமணம் செய்ய மறுக்கிறார். டிஜிபி அலுவலகத்தி லும், முதல்வர் தனிப் பிரிவிலும் புகார் அளித்ததால் எனக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், கோவை போலீஸ் கமிஷனர் ஒரு தலைப்பட்சமாக நடந்துகொள்கி றார். அவர் மீது நம்பிக்கை இழந்த தால்தான் இந்த புகாரை முதல்வ ரின் தனிப் பிரிவில் கொடுக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in