இரவில் விபத்துகளைத் தடுக்க மாடுகளின் கொம்புகளில் ஒட்டப்பட்டுள்ள ஒளிரும் பட்டை ஸ்டிக்கர்

இரவில் விபத்துகளைத் தடுக்க மாடுகளின் கொம்புகளில் ஒட்டப்பட்டுள்ள ஒளிரும் பட்டை ஸ்டிக்கர்
Updated on
1 min read

கோசாலைகள் இன்றி கோயில்களுக்கு நேர்த்திக்கடனாக விடப்படும் மாடுகளும், மாடுகளின் உரிமையாளர்களும் அவிழ்த்து விடுவதால் காரைக்குடி நகரில் மட்டும் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாடுகள் சாலைகளில் திரிகின்றன.

அவை திடீரென மிரண்டு சாலைகளின் குறுக்கே ஓடுவதால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள், விபத்தில் சிக்கி படுகாயமடைந்து வருகின்றனர். இதையடுத்து இரவு நேரங் களில் மாடுகளால் விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்க மாடுகளின் கொம்புகளில் ஒளிரும் பட்டை ஸ்டிக்கர்களை காரைக்குடி மக்கள் மன்றத்தினர் ஒட்டி வரு கின்றனர்.

இதுகுறித்து மக்கள் மன்றத் தலைவர் ச.மீ. ராசகுமார் கூறியது:

காரைக்குடியில் மாடுகள் போஸ்டர்கள், குப்பை கழிவுகளை மாடுகள் உட்கொள்கின்றன. மாடுகள் இரவில் சாலைகளின் குறுக்கே செல்வதால் அதிக விபத்துகள் ஏற்படுகின்றன.

இதனால் விபத்தைத் தடுக்கும் முயற்சியாக மாடுகளின் கொம் புகளில் ஒளிரும் பட்டை ஸ்டிக்கர்களை ஒட்டி வருகிறோம். இதுவரை 50 மாடுகளுக்கு ஸ்டிக்கர்களை ஒட்டி உள்ளோம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in