Published : 23 Dec 2019 11:07 AM
Last Updated : 23 Dec 2019 11:07 AM

ஜல்லிக்கட்டுக்கு பயிற்சி அளிக்கும் ஒரு கண் பார்வையிழந்த மதுரை இளைஞர்:  சீறிப்பாயும் காளைகளை அடக்கத் தயாராகும் வீரர்கள் 

சீறிப் பாயும் காளைகளுக்கும், அவற்றை அடக்கத் தயாராகும் வீரர்களுக்கும் ஜல்லிக்கட்டில் மாடு குத்தி ஒரு கண் பார்வையிழந்த மதுரை இளைஞர் பயிற்சி கொடுப்பது அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

பொங்கல் பண்டிகை நெருங்கு வதால் தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன. மாணவர்கள் போராட்டத்துக்குப் பிறகு ஜல்லிக் கட்டுப் போட்டிகள், தமிழகம் முழுவதும் நடக்கத் தொடங்கி விட்டன. வாடிவாசலில் இருந்து ஆவேசத்துடன் சீறிப் பாயும் காளை களை அடக்க மாடுபிடி வீரர்களும், அவர்களைக் கலங்கடித்து ஓட வைக்க காளைகளையும் தயார்ப் படுத்தும் பயிற்சிகள் ஜல்லிக்கட்டு கிராமங்களில் களைகட்டத் தொடங்கிவிட்டன.

ஒரு காளையை ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தயார் செய்வது எளிதான செயல் அல்ல. காளை வளர்ப்போரின் பராமரிப்பு, போதுமான இடைவெளியில் தொடர் பயிற்சி, சத்தான தீவனம் வழங்குவது, சிகிச்சை, உடல் எடை கண்காணிப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் அடங்கி உள்ளன.

தினமும் பொதுவான பயிற்சி களுடன் தற்போது உணவுப் பராமரிப்பும், பயிற்சியும் காலத்துக்கு ஏற்ப மாறியுள்ளன. ஒரு விளையாட்டு வீரர் எப்படி ஓடுகிறாரோ அதுபோல் காளையும் களத்தில் நின்று விளையாடு வதற்கும், மாடுபிடி வீரர்களையும், கூட்டத்தைப் பார்த்ததும் மிரண்டு ஓடாமல் இருக்கவும், ஆவேசமாகப் பாய்ந்து மாடுபிடி வீரர்களை புறமுதுகாட்டி ஓட வைக்கவும் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப் படுகின்றன. கடந்த சில வாரங்களாக மாடுபிடி வீரர்கள் மாதிரி வாடிவாசலை அமைத்து பயிற்சி பெறுவதும், காளைகளை தோப்பு, வயல்களில் கட்டிப்போட்டு பயிற்சி கொடுப்பதுமாக இருக்கின்றனர்.

இந்நிலையில், மதுரை அருகே முடக்காத்தான் கிராமத்தைச் சேர்ந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் ஒரு கண் பார்வை இழந்த இளைஞர் மணி ரத்தினம் (25) மாடுபிடி வீரர் களுக்கும், காளைகளுக்கும் பயற்சி கொடுப்பது பலரது கவன த்தை ஈர்த்துள்ளது.

2015-ம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டுப்போட்டியில் காளை ஒன்று குத்தியதில் மணிரத்தினம் ஒரு கண்ணின் பார்வையை இழந்தார். அதன்பிறகு அவரால் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக் கவில்லை. தற்போது மாடுபிடி வீரர் களுக்குப் பயிற்சி கொடுப்பதோடு, சொந்தமாக இந்த ஆண்டு இரண்டு ஜல்லிக்கட்டு காளைகளைத் தயார் செய்து வருகிறார். ஒரு கண் பார்வை பறிபோனாலும் ஜல்லிக் கட்டு மீதான அவரது ஆர்வம் குறை யாமல் இருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இதுகுறித்து மணிரத்தினம் கூறுகையில், ‘’16 வயதிலிருந்து மாடுபிடித்து வருகிறேன். இதுவரை 150 ஊர்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் விளையாடி 30 தங்கக்காசுகளுக்கு மேல் பரிசு வாங்கியுள்ளேன். பீரோ, கட்டில் என்று ஏராளமான பரிசுகள் வீட்டில் குவிந்து கிடக்கின்றன.

மாடு குத்தி ஒரு கண்ணின் பார்வை முற்றிலும் போன பிறகும் நிறைய ஊர்களில் ஜல்லிக் கட்டுப்போட்டிகளில் பங்கேற்க ஆர்வமாகச் செல்வேன். ஆனால், கண் பார்வை பறிபோன தால் என்னைப் போட்டியில் சேர்க்கமாட்டார்கள். நான் லாரி ஓட்டுநராகத்தான் இருந்தேன். ஒரு கண் பார்வை போனதால் ஓட்டுநர் உரிமமும் ரத்தானது.

அந்தப் பிழைப்பும் போனதால் தற்போது மூட்டை தூக்கிப் பிழைக்கிறேன். எனக்கு மாட்டை எப்படி அடக்கணும், காளைகளை எப்படி வளர்க்கணும் என்ற வித்தை கள் அத்துபடி. அந்த நுட்பத்தை மற்ற மாடுபிடி வீரர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறேன்.

வீட்டில் 2 ஜல்லிக்கட்டு காளை களை வளர்க்கிறேன். ஒரு காளைக்கு 6 வயது, மற்றொரு காளைக்கு 4 வயது. இந்த இரண்டு காளைகளையும் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப்போட்டியில் பங்கேற்க வைக்க உள்ளேன். அதற்காகத்தான் பயிற்சி கொடுக் கிறேன். ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு 30 நாட்களுக்கு முன்பிருந்தே பயிற்சி கொடுக்கத் தொடங்கி விட்டேன். போதிய உடல் எடை, வலு, தசை வளர்ச்சி ஜல்லிக்கட்டு காளையின் திறனை வெளிப்படுத்த அவசியமாகும்.

காளைகளை மண்ணைக் குத்த விட்டு, நீச்சல் பயிற்சி கொடுக் கிறேன். தினமும் 8 கி.மீ., நடைப் பயிற்சியும் கொடுக்கிறேன். பயிற்சி முடிந்ததும், காலையில்கத்தாளை, மஞ்சள்பொடி, உப்பு போட்டு தண்ணீர் காட்டுகிறேன். மதியம், பிரண்டை, சின்னவெங்காயம், இஞ்சி, சிவப்பு மிளகாய், வெற்றிலை, மிளகு ஆகிவற்றை உரலில் போட்டு இடித்து தீவனத் துடன் சேர்த்துக் கொடுக்கிறேன்.

இரவு பாசி தூசி, துவரம் தூசி, கோதுமை தவிடு, பச்சரிசி மாவு உள்ளிட்டவற்றுடன் பருத்தி விதை, பச்சை அரிசி, தேங்காய், பேரீச்சம் பழமும் கொடுக்கிறேன். தினமும் 3 நாட்டுக்கோழி முட்டையும் சேர்த்து 30 நாள் இந்தத் தீவனத்தை காளைகள் சாப்பிட்டாலே நல்ல உடல் வலுவும், எடையும் அதிக ரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x