குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்: பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தகவல்

திருவாரூர் மாவட்டம் பில்லூரில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவாக நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா.
திருவாரூர் மாவட்டம் பில்லூரில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவாக நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா.
Updated on
1 min read

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலை யொட்டி, திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதியில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், பின்னர் செய்தி யாளர்களிடம் கூறியது:

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார். இலங்கை தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங் குவது குறித்து பாஜகவுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

நடிகர் கமல்ஹாசனுக்கு அரசியல் சட்டமும் தெரியவில்லை, நாடாளுமன்ற நடவடிக்கைகளும் தெரியவில்லை.

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து, ஒருமாதம் தொடர்ந்து வீடு வீடாகச் சென்று, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த பாஜக முடிவு செய்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து ஸ்டாலினுக்கும் தெரியவில்லை என்றால், அவருக்கும் சொல்லிக் கொடுப்போம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in