பண மதிப்பிழப்பு நேரத்தில் சசிகலா வாங்கியதாக கூறப்படும் ரூ.1,674 கோடி சொத்துகளின் பட்டியல்: உயர் நீதிமன்றத்தில் வருமானவரித் துறை தாக்கல்

பண மதிப்பிழப்பு நேரத்தில் சசிகலா வாங்கியதாக கூறப்படும் ரூ.1,674 கோடி சொத்துகளின் பட்டியல்: உயர் நீதிமன்றத்தில் வருமானவரித் துறை தாக்கல்
Updated on
1 min read

பணமதிப்பிழப்பு நேரத்தில் தொழிலதிபர்களை மிரட்டி சசிகலா வாங்கியதாக கூறப்படும் சொத்துகளின் பட்டியல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வருமானவரித் துறை இந்தப் பட்டியலை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சசிகலா வழக்கு

தன் மீது வருமானவரித் துறை தொடர்ந்த வழக்கில் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வருமானவரித் துறை தாக்கல் செய்த அறிக்கையில், ‘கடந்த 2016-ம் ஆண்டு நவம்பரில் மத்திய அரசு மேற்கொண்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை நேரத்தில் சசிகலா சொத்துகள் வாங்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் ரூ.1,674 கோடி அளவுக்கு சொத்துகள் வாங்கியது தெரியவந்தது’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், பண மதிப்பிழப்பு நேரத்தில் தொழிலதிபர்களை மிரட்டி சசிகலா வாங்கியதாக கூறப்படும் சொத்துகளின் பட்டியலை வருமானவரித் துறை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பணமதிப்பிழப்பு நேரத்தில் தொழிலதிபர்களை மிரட்டி சசிகலா வாங்கியதாக கூறப்படும் சொத்துகளின் விவரம் வருமாறு:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in