குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக புதுச்சேரியில் வரும் 26-ம் தேதி பேரணி;  27-ம் தேதி பந்த்: காங்கிரஸ் அறிவிப்பு

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக புதுச்சேரியில் வரும் 26-ம் தேதி பேரணி;  27-ம் தேதி பந்த்: காங்கிரஸ் அறிவிப்பு
Updated on
1 min read

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் 27-ம் தேதி பந்த் நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.

மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் கட்சித் தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம் மற்றும் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர்.

வரும் 26-ம் தேதி மாலை 4.30 மணிக்கு அனைத்துக் கட்சியினரும் தேசியக் கொடி ஏந்தி பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது. அடுத்ததாக 27-ம் தேதி பந்த் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

காலை 6 ணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் பந்த் போராட்டத்திற்கு அனைத்துப் பிரிவினரும் ஆதரவு தர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், முதல்வர் நாராயணசாமி ஆகியோர் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in