Published : 22 Dec 2019 11:56 AM
Last Updated : 22 Dec 2019 11:56 AM

சென்னை டுவின்டெக் அகாடமி நடத்தும் மருத்துவமனை மேலாண்மை சான்றிதழ் படிப்பு; விண்ணப்பங்கள் வரவேற்பு 

சென்னை

சென்னை டுவின்டெக் ஹெல்த்கேர் அகாடமி மற்றும் கோவின் அகாடமி இணைந்து குறுகிய கால மருத்துவமனை மேலாண்மை சான்றிதழ் படிப்பை நடத்துகின்றன.

இதுகுறித்து சென்னை டுவின்டெக் ஹெல்த்கேர் அகாடமியின் இயக்குநர் அ.மகாலிங்கம் வெளியிட்ட அறிவிப்பு:

''மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், செவிலியர்கள், மற்றும் விருப்பம் உள்ள பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தச் சான்றிதழ் படிப்பு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவம் சார்ந்த நிறுவனங்களில் நிர்வாகம் மற்றும் மேலாண்மைத் துறைகளில் பணியாற்றும் இளநிலை மற்றும் மத்திய நிலை ஊழியர்களின் வசதியை கருத்திற்கொண்டு 5 வார இறுதி நாட்களை பயிற்சிக்காலமாக (சனிக்கிழமை காலை 9 மணி முதல் 5 மணி வரை) அமைத்து வகுப்புகளாக வழங்குகிறது.

ஒரு தொகுதிக்கு 25 மாணவர்கள் மட்டுமே, எனவே சேர்க்கை முதலில் வந்த முதல் சேவை அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும். சான்றிதழ் படிப்பின் 5-வது தொகுதிக்கான வகுப்புகள் 04.01.2020 (சனிக்கிழமை) முதல் தொடங்குகிறது.

பயிற்சி நடைபெறும் இடம்: பாம்குரோவ் ஹோட்டல், 13, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 600 034.

கம்யூனிகேஷன் திறன், சுகாதாரச் சேவையில் மனித வள மேலாண்மை, மருத்துவமனைகளுக்கான தர அங்கீகார முறைகள், தொடர் விநியோக மேலாண்மை எனப்படும் சப்ளை செயின் மேனேஜ்மெண்ட், சுகாதாரத் துறையில் தகவல் தொடர்பு வசதிகள், சுகாதார பாதுகாப்பு சட்டங்கள்,ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் மற்றும் க்ளெய்ம் மேனேஜ்மென்ட், முழுத்தர நிர்வாகம், பயிற்சி மற்றும் வளர்ச்சி தேவைகள், நிதி நிர்வாகம் உள்ளிட்ட சிறப்பு அம்சங்களை உள்ளடக்கியதாக இந்தப் படிப்பு அமைந்துள்ளது.

நிச்சயமாக அவர்கள் நன்கு தகவலறிந்த முடிவுகளை எடுக்க உதவும் மத்திய நிலை மற்றும் மூத்த மேலாளர்கள் நிர்வாகச் சிக்கல்கள் மற்றும் கருத்துகள் ஒட்டுமொத்தமாகப் புரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படிப்பின் மூலம் பயிற்சி பெறும் மாணவர்கள் தங்களது தலைமைப்பண்புகளையும், குழுமனப்பாங்கினை மேம்படுத்திக் கொள்ளலாம்.

இந்தப் படிப்பின் மற்றுமொரு முக்கிய நோக்கம், மருத்துவமனைகளின் வளமான நிகழ்கால அனுபவங்களிடமிருந்து பெறப்பட்ட மற்றும் சமீபத்திய மேம்படுத்தப்பட்ட மேலாண்மை உத்திகளை அந்தந்த துறைகளின் வல்லுநர்களின் மேற்பார்வையில், தனிநபர்களைச் சிறந்த திறமைமிக்க சிறப்பாகச் செயல்படக்கூடிய மேற்பார்வை மற்றும் நிர்வாக அதிகாரிகளை உருவாக்குவதே ஆகும்.

ஆன்லைன் பதிவு மற்றும் விண்ணப்பப்பிக்க கவனிக்க வேண்டிய வலைத்தளம்: www.chennaitwintech.com

மேலும் விவரங்களுக்கு 91 97104 85295 / 98405 23560 என்ற செல்போன் எண்களுக்குத் தொடர்பு கொண்டு பேசலாம்''.

இவ்வாறு அ.மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x