

ஒய்.ஆண்டனி செல்வராஜ்
மழைக்காக வாக்குப்பதிவை நிறுத்தக்கூடாது என்று வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட் டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச் சாவடி தலைமை அலுவலர், அவர் களுடன் பணிபுரியும் அலுவலர் களுக்கு வாக்குப்பதிவு நேரத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நடை முறைகள் குறித்து மாநில தேர் தல் ஆணையம் பல்வேறு கட்டுப் பாடுகளை விதித்துள்ளது. அதில் சில அம்சங்கள் வருமாறு:
*தீ விபத்து, வாக்குச்சாவடியில் கலகம் போன்ற காரணங்களால் வாக்குப்பதிவை ஒத்தி வைக்க லாம். ஆனால், மழை, காற்று போன்ற காரணங்களுக்காக வாக்குப் பதிவை ஒத்திவைக்கக்கூடாது. மேலும் கலகமோ அல்லது வன் முறையோ ஏற்பட்டால் அவற்றைக் கட்டுப்படுத்த போலீஸ் உதவியை வாக்குச்சாவடி அலுவலர்கள் உடனே நாட வேண்டும்.
கலகம் நீடித்து வாக்குப்பதிவை தொடர்ந்து நடத்துவது முடியா தென்று கருதினால் மட்டுமே வாக்குப் பதிவை ஒத்திவைக்க வேண்டும். இதுபோன்ற பதற்ற மான, அசாதாரண காலங் களில் வாக்குப்பெட்டிகளை முறைப்படி மூடி முத்திரையிட்டு காப்புறுதி செய்ய வேண்டும். வாக்குப் பதிவு அடுத்தபடியாக அறிவிக் கப்படும் நாளில் நடை பெறும் என்பதை முறைப்படி அங்கு உள்ளவர்களுக்கு அறி விக்க வேண்டும். தேர்தல் அதிகாரி களுக்கு வாக்குச்சாவடி யில் நடந்த கலகத்தை தெரிவித்து அவர்கள் ஆலோசனைப்படி நட வடிக்கை எடுக்க வேண்டும்.
*வாக்குச்சாவடிகளில் யாராவது வாக்குச்சீட்டை வலுக்கட்டாய மாகவோ, மோசடியாகவோ எடுத் துச் செல்ல முயன்றாலோ அல்லது அதற்கு உதவி செய்தாலோ அவர் தண்டிக்கப்படுவார்.
*ஒரு வாக்காளர் வாக்குச்சீட் டில் முத்திரையிட்ட பிறகு மற்றவர் களிடம் அதைக் காட்டினாலோ அல்லது யாருக்கு வாக்களித்தார் என்பதை வாக்குச்சாவடிக்குள் மற்றவர்களுக்கு தெரிவித்தாலோ அது வாக்குப்பதிவு ரகசியத்தை மீறுவதாகும். அவ்வாறு ஒருவர் செய்தால் அந்த வாக்குச்சீட்டுகளை திரும்பப் பெற்று அதன் பின்புறத் தில் ‘வாக்குப்பதிவு நடைமுறை மீறப்பட்டது, ரத்து செய்யப்பட்டது’ என்று எழுதி கையெழுத்திட வேண்டும். இவருக்கு மீண்டும் வாக்குச்சீட்டு வழங்கக் கூடாது.
அதேபோல், ஒரு வாக்காளர் வாக்குச்சாவடிக்குள் வாக்களிக்க வந்து வாக்களிக்க விரும்பவில்லை என முடிவெடுத்தால் அவர் அவ் வாக்குச் சீட்டினை வாக்குச் சாவடித் தலைமை அலுவலரிடம் திரும்ப வழங்கலாம். அவ்வாறு திரும்பப் பெறப்படும் வாக் குச்சீட்டுகளின் பின்புறத்தில் ‘திரும்ப வழங்கப்பட்டது-ரத்து செய்யப்பட்டது’ என வாக்குச் சாவடி தலைமை அலுவலர் பதிவு செய்ய வேண்டும். ரத்து செய்யப்பட்ட வாக்குச்சீட்டுகள் அனைத்தையும் தனி உறையில் போட்டு முத்திரையிட வேண்டும்.
*மரணமடைந்த, காணாமல் போன, போலி வாக்காளர்கள் குறித்த விவரங்களை வாக்குச் சாவடி முகவர்கள் தங்களுடன் கொண்டுவர வாய்ப்புள்ளது. வேட்பாளர் அல்லது அவரது தேர்தல் முகவர் இதைப் போன்ற விவரங்களை உங்களிடம் வழங்கலாம். அதில், இடம் பெற்ற ஒருவரின் பெயர் மீதே வேறொருவர் வாக்களிக்க வரும் பட்சத்தில் அவர் பெயர் வாக்காளர் பட்டியலில் காணப்பட்டால் வாக் குச் சாவடி அலுவலர்கள் கவன மாக அதைப் பரிசீலிக்க வேண்டும்.
*வாக்காளர்களின் வசதிக்காக வேட்பாளர்கள் சொந்த அல்லது வாடகை வாகனங்களைப் பயன் படுத்துவது குறித்து எழுத்து மூலம் யாராவது புகார் அளித்தால் அதை மண்டல அலுவலர் மூலமாக தேர்தல் அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.