Published : 22 Dec 2019 10:33 AM
Last Updated : 22 Dec 2019 10:33 AM

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கிறோம்; ஆட்சியே கவிழ்ந்தாலும் புதுச்சேரியில் அமல்படுத்த மாட்டோம்: இஸ்லாமியர்களின் முன்னிலையில் நாராயணசாமி உறுதி

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி இஸ்லாமிய அமைப்பினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற முதல்வர் நாராயணசாமி, திமுக அமைப்பாளர் சிவா உள்ளிட்டோர்.

புதுச்சேரி

ஆட்சியே கவிழ்ந்தாலும் குடியு ரிமை திருத்தச் சட்டத்தை புதுச்சேரியில் அமல்படுத்த மாட்டேன் எனஇஸ்லாமியர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் நாராய ணசாமி உறுதியளித்திருக்கிறார்.

புதுச்சேரி, சுல்தான்பேட்டை, கோட்டக்குப்பம் வட்டார ஜமா அத்துல் உலமா சபையின் சார்பாக, அனைத்து இஸ்லாமிய அரசியல் கட்சிகள், இயக்கங்கள் மற்றும் அனைத்து மஹல்லா ஜமாஅத் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தும் கண்டன பொதுக் கூட்டம் நேற்று சுதேசிகாட்டன் மில் அருகில் நடைபெற் றது. இக்கூட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் முஹம்மது மூசா தலைமைதாங்கினார்.

இதில் முதல்வர் நாராயணசாமி, திமுக தெற்கு மாநில அமைப் பாளர் சிவா எம்.எல்.ஏ., தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை பொதுச்செயலாளர் அன்வர் பாதுஷா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்தமிழ்நாடு முதன்மை துணைத் தலைவர் அப்துல் ரஹ்மான், எஸ்டிபிஐ கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தமிழ் மாநில பொதுச்செயலாளர் ஆபிரூத்தீன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக புதுச்சேரி மாவட்ட தலைவர் பஷீர் அஹமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கண்டன பொதுக் கூட்டத் தில் முதல்வர் நாராயணசாமி பேசி யது:

இஸ்லாமிய மக்களை திட்ட மிட்டு பழிவாங்க வேண்டும் என்றநோக்கில் இந்தச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளனர். எங்கள் உயிரேபோனாலும், ஆட்சியே கவிழ்த் தாலும் இச்சட்டத்தை புதுச்சேரியில் நிறைவேற்ற மாட்டோம்.

புதுச்சேரியில் மதசார்பற்ற ஆட்சி நடைபெற்று வருகிறது. நாங்கள் சிறுபான்மை சமுதாயத்திற்கு ஊறுவிளைவிக்கின்றவர்கள் யாராக இருந்தாலும் எதிர்க்க தயாராக உள்ளோம். எங்களுக்கு ஆட்சி முக்கியமல்ல, அதிகாரம் முக்கி யமல்ல, மக்களுடைய சக்தி எங்கள்பக்கம் உள்ளது. மோடியும், அமித் ஷாவும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறும் வரை எங்களது போராட்டம் தொடரும்.

இலங்கையிலிருந்து விரட்டி அடிக்கப்பட்ட தமிழர்களும் இந்தியர்கள்தான். அந்த மக்கள் 30 ஆண்டுகளாக அகதிகள் முகா மில் உள்ளனர். அவர்களுக்கு பாது காப்பு இல்லை.

இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை தர விதியில்லை. இந்த நாட்டை சீர்குலைக்க வேண்டும், துண்டாட வேண்டும் என்பதில் மத் திய அரசு உறுதியாக உள்ளது.

இந்தச் சட்டத்தை அதிமுக ஆதரித்து தமிழக மக்களுக்கு துரோகம்செய்கிறது.

தமிழகத்தில் சிறுபான்மை இன மக்களை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே அதி முக அரசு செயல்படுகிறது. தற்போது இலங்கைத் தமிழர்க ளுக்கு இரட்டை குடியுரிமை பெற்றுத் தருவோம் என்று கூறுகின்றனர். முதலில் இந்தியாவில் குடியு ரிமை பெற்று கொடுங்கள். குடியுரிமையை சட்டத்திருத்த மசோ தாவை திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x