பாமக நிர்வாகி மகன் சாலை விபத்தில் உயிரிழப்பு: அன்புமணி, கட்சி நிர்வாகிகள் அஞ்சலி

பாமக நிர்வாகி மகன் சாலை விபத்தில் உயிரிழப்பு: அன்புமணி, கட்சி நிர்வாகிகள் அஞ்சலி

Published on

பாமக துணைப் பொதுச் செய லாளர் ராதாகிருஷ்ணனின் மகன், சாலை விபத்தில் உயிரிழந்தார். அன்புமணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பாமக துணைப் பொதுச் செய லாளர் ராதாகிருஷ்ணன். இவர் சென்னை தண்டையார்பேட்டை கணக்கர் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது ஒரே மகன் ஆர்.கோகுல் (18). இவர் வண்டலூர் - கேளம்பாக்கம் சாலை யில் உள்ள விஐடி கல்லூரியில் முதலாண்டு சட்டப் படிப்பு படித்து வந்தார்.

இவரது நண்பர் யோக பிரசாத். இவர்கள் 2 பேரும் நேற்று முன் தினம் நள்ளிரவு பைக்கில் தண்டையார்பேட்டைக்கு புறப்பட் டுள்ளனர். பைக்கை யோக பிரசாத் ஓட்டியுள்ளார். நள்ளிரவு 12.45 மணி அளவில் எண்ணூர் விரைவுச் சாலையில் துறைமுகம் நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.

பட்டினத்தார் கோயில் அருகே சென்றபோது, முன்னால் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது எதிர்பாராதவிதமாக பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில், சம்பவ இடத்திலேயே கோகுல் உயிரிழந்தார். யோக பிரசாத்துக்கு கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

தகவல் அறிந்து திருவொற்றியூர் போலீஸார் விரைந்து வந்தனர். காயமடைந்த யோக பிரசாத்தை மீட்டு திருவொற்றியூரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோகுல் உடலை போலீஸார் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பினர்.

பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, கோகுல் உடல் நேற்று காலை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை பெற்றுக்கொண்ட பெற்றோர், உறவினர்கள், கல்லூரி நண்பர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி, பசுமை தாயகம் அமைப்பின் மாநில தலை வர் சவுமியா அன்புமணி, வழக்கறி ஞர் கே.பாலு மற்றும் பாமக நிர்வாகிகள் பலரும் கோகுல் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மாலை 4 மணி அளவில் தண்டையார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டது. பின்னர், காசிமேடு மயானத்தில் இறுதிச் சடங்கு நடைபெற்றது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in