Published : 22 Dec 2019 07:13 AM
Last Updated : 22 Dec 2019 07:13 AM

குடியுரிமை திருத்த சட்டம் திரும்ப பெறப்படும் வரை திமுக தொடர்ந்து போராடும்: மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

அண்ணாவின் எழுத்து, பேச்சுகள், படைப்புகள் அடங்கிய தொகுப்பான ‘அண்ணா அறிவுக்கொடை தொகுதிகள்’ என்ற தொகுப்பில் 64 நூல்கள் வெளியீட்டு விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நூல்களை வெளியிட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பெற்றுக் கொண்டார். உடன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விஐடி வேந்தர் கோ.விசுவநாதன், தமிழ் மண் பதிப்பக உரிமையாளர் இளவழகன், தொகுப்பாசிரியர் செந்தலை கௌதமன்.படம்: ம.பிரபு

சென்னை

குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்பப் பெறப்படும் வரை திமுக தொடர்ந்து போராடும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான அண்ணாவின் பேச்சு கள், எழுத்துகள், படைப்புகளை 'அண்ணா அறிவுக்கொடை' என்ற தலைப்பில் 110 தொகுதிகளாக தமிழ்மண் பதிப்பகம் வெளியிட உள்ளது.

இதில், முதல்கட்டமாக 64 நூல் கள் வெளியிடும் நிகழ்ச்சி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று நடை பெற்றது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நூல்களை வெளியிட, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பெற்றுக்கொண்டார். திராவிடர் கழ கத் தலைவர் கி.வீரமணி தலைமை யில் நடைபெற்ற இவ்விழாவில் விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன் முன்னிலை வகித்தார். தமிழ்மண் பதிப்பக உரிமையாளர் கோ.இளவழகன், அண்ணா அறிவுக்கொடை நூல் தொகுப்பாசிரியர் புலவர் செந்தலை கவுதமன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

அரை டவுசர் போட்டுக் கொண்டு பள்ளியில் படிக்கும் காலத்தில் அண்ணாவை பார்த்து பேசும் வாய்ப் பைப் பெற்ற நான், அவர் தொடங் கிய திமுகவின் தலைவராக இருக் கிறேன். அண்ணாவின் பேச்சுகள், எழுத்துகள் அடங்கிய முழுத் தொகுப்பை வெளியிட வேண்டும் என்று 1974-ம் ஆண்டிலேயே கருணாநிதி விரும்பினார். அவரது கனவை தமிழ்மண் பதிப்பகம் இப்போது நிறைவேற்றியுள்ளது.

இந்திய அளவில், உலக அளவில் தமிழகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் அண்ணா. அவரது நாடாளுமன்ற உரைகள் வடஇந் தியர்களுக்கு தமிழகத்தைப் பற்றி யும், தமிழர்களைப் பற்றியும் புரிய வைத்தன. ஜனநாயகம், மதச்சார் பின்மை, சமூக நீதி, மாநில சுயாட்சி, தமிழ்மொழி பாதுகாப்பு என்று அண்ணா எந்தக் கொள்கைகளுக் காக பாடுபட்டாரோ அதற்கு இப் போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. அத னால் அன்றைக்கு மட்டுமல்ல; இன் றும் அண்ணா தேவைப்படுகிறார்.

மத்திய பாஜக அரசால் நாட்டின் ஒற்றுமை, பன்முகத் தன்மை, மதச் சார்பின்மைக்கு ஆபத்து ஏற்பட்டுள் ளது. முஸ்லிம்கள், ஈழத் தமிழர் களுக்கு குடியுரிமை மறுக்கும் குடி யுரிமை திருத்தச் சட்டத்தை பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. இதனால் நாடே பற்றி எரிகிறது. இச்சட்டத்தை எதிர்த்து போராடி வருகிறோம்.

வரும் 23-ம் தேதி (நாளை) திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் பேரணி நடைபெறவுள்ளது. குடி யுரிமை திருத்தச் சட்டம் திரும்பப் பெறப்படும் வரை திமுக தொடர்ந்து போராடும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசி னார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x