

இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை கவுரவிக்கும் நோக்கில் இந்தாண்டிற்கான கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி, அவரது உருவில் 341 கிலோ சாக்லெட் சிலை புதுச்சேரியில் உருவாக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ள பேக்கரி கடை ஒன்று கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் பிரம்மாண்டமாக பல பிரபலங்களின் உருவத்தில் சாக்லேட் சிலை செய்வது வழக்கம்.
அதன்படி இந்தாண்டு, இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனின் சாக்லெட் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் உயரம்5 அடி 10 அங்குலம் ஆகும். இதன் எடை341 கிலோ. பெல்ஜியமிலிருந்து சாக்லெட் கொண்டு வரப்பட்டு, இந்த சாக்லெட் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையை அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவரின் 124 மணி நேர உழைப்பால் உருவாக்கப்பட்டு, பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இவர்கள் மகாத்மா காந்தி, சுதந்திர தேவி சிலை, மிக்கி மவுஸ், அப்துல்கலாம் போன்ற பல சாக்லேட் சிலைகளை முன்பு உருவாக்கி உள்ளனர்.அதன் அடிப்படையில், நடப்பாண்டில் வீரத்தின் வாயிலாக இந்திய மக்கள் மனதில் இடம் பிடித்த விங் கமாண்டர் அபிநந்தனுக்காகஇந்தச் சாக்லெட் சிலை உருவாக்கியுள்ளதாக பெருமையுடன் தெரிவிக்கின்றனர்.