கார் டீலர்கள், காப்பீடு நிறுவனங்கள்: போலி ரசீதுகள் மூலம் ரூ.2,500 கோடி மோசடி - சுங்கப் புலனாய்வு விசாரணையில் அம்பலம்

கார் டீலர்கள், காப்பீடு நிறுவனங்கள்: போலி ரசீதுகள் மூலம் ரூ.2,500 கோடி மோசடி - சுங்கப் புலனாய்வு விசாரணையில் அம்பலம்
Updated on
1 min read

மீறி கார் டீலர்கள் மற்றும் காப்பீடு நிறுவனங்கள் வாகனக் காப்பீடு விதிமுறைகளை ரூ.2,500 கோடி வரை முறைகேட்டில் ஈடுபட்டது சுங்கப் புலனாய்வு விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக பத்திரிகை தகவல் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி யுள்ளதாவது:

‘சென்வாட்’ (மத்திய மதிப்புக் கூட்டு வரி) கடன் விதிமுறைகளை மீறி, கார் டீலர்கள் வழங்கிய போலியான ரசீதுகளை பெற்றுக் கொண்டு வாகன காப்பீடு வழங்கப் பட்டிருக்கிறது. இதுதொடர்பாக 16 காப்பீடு நிறுவனங்களுக்கு சம்மன் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் மத்திய சுங்கப் புலனாய்வுத் துறையின் சென்னை மண்டல தலைவர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

வாகன காப்பீடு தொடர்பாக குறிப்பிட்ட சில நிறுவனங்களுடன் கார் உற்பத்தி நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன. மேலும், தாங்கள் பரிந்துரைக்கும் காப்பீடு நிறுவனங்கள் மூலமாகதான் வாகனக் காப்பீடு வழங்க வேண்டும் என்று கார் டீலர்களிடம் கார் உற்பத்தி நிறுவனங்கள் அறி வுறுத்தின. இதற்காக காப்பீடு மதிப்பின் அடிப்படையில், கார் உற்பத்தி நிறுவனத்துக்கு 2 முதல் 3 சதவீதம் வரையும், கார் டீலர்களுக்கு 15 முதல் 45 சதவீதம் வரையும் காப்பீட்டு நிறுவனங்கள் கமிஷன் கொடுத்துள்ளன.

இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய விதி களின்படி, ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட காப்பீடு நிறுவனங்கள் மூலமாக மட்டுமே வாகனக் காப்பீடு வழங்கப்பட வேண்டும். மொத்த காப்பீடு தொகையில் 10 சதவீதம் வரை மட்டுமே கமிஷன் கொடுக்கலாம்.

இந்த விதிமுறைகளை மீறுவதற் காக காப்பீடு நிறுவனங்களுக்காக கார் டீலர்கள் விளம்பரம் வழங் கியது போலவும், கணினி போன்ற சாதனங்களை வாடகை விட்டது போலவும், வாடிக்கையாளர் விழிப் புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது போலவும் போலியான ரசீதுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட கார் டீலர்கள், காப் பீட்டு நிறுவன ஊழியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசார ணையில் இது தெரியவந்துள்ளது. ரூ.1,200 கோடி முதல் ரூ.2,500 கோடி வரை முறைகேடு நடந் துள்ளது என கூறப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட காப்பீடு நிறுவனங்கள் மூலமாக மட்டுமே வாகனக் காப்பீடு வழங்கப்பட வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in