

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சி பித்தளைப்பட்டி. உள்ளாட்சி தேர்தலில் கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட 6 பேரும், ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கு பித்தளைப் பட்டியைச் சேர்ந்த 2 பேரும் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் பித்தளைப்பட்டி யில் உள்ள காளியம்மன் கோயிலில் ஊர் முக்கியஸ்தர்கள், சமுதாயத் தலைவர்கள், பொதுமக்கள், கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் நேற்று முன்தினம் இரவு கூடினர்.
வேட்பாளர்கள் அனைவரும் அம்மனை வணங்கிவிட்டு, பித்த ளைப்பட்டி ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நாங்கள், ஓட்டுக்காக வாக்காளர்களுக்குப் பணமோ, பரிசுப் பொருளோ தரமாட்டோம். பொதுமக்களுக்கு செய்ய வேண்டிய நலத்திட்டங் களை சொல்லியே ஓட்டுக் கேட் போம் எனக் கோயிலில் சத்தியம் செய்து ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் உறுதிமொழி எடுத் துக் கொண்டனர். இதை ஊர் பிர முகர்கள் கைதட்டி வரவேற்றனர்.
இதில் கிராம ஊராட்சித் தலை வர் பதவிக்கு போட்டியிடும் மயில் சாமி, செந்தில், முத்தையா, வீர முத்து, சுப்பையா, சுருளிவேல் ஆகி யோரும் ஒன்றிய கவுன்சிலர் பத விக்கு போட்டியிடும் கோகிலா, பழனியம்மாளும் பங்கேற்றனர்.