

தமிழகத்துக்குள் 4 தீவிரவாதி கள் ஊடுருவி இருக்கலாம் என்று மாநில உளவுத் துறை போலீஸார் எச்சரித்ததைத் தொடர்ந்து, தீவிர தேடுதல் வேட்டையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
குடியுரிமை திருத்த சட்டத் துக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் தீவிர போராட் டங்கள் நடந்து வருகின்றன. தமிழகத்திலும் திமுக உள் ளிட்ட சில கட்சிகளும், சில அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.
இதற்கிடையே, குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் தாக்குதல் நடத்தும் நோக்கில் 4 தீவிரவாதிகள் தமிழகத்துக்குள் நுழைந்து இருப்பதாக மாநில நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் எச்சரித்துள்ளனர்.
இந்த 4 தீவிரவாதிகளும் சேலம் மாவட்டத்தில் தங்கி இருக்கலாம் என்றும் கூறப்படு கிறது. 4 தீவிரவாதிகளின் புகைப்படங்களை கண்டு பிடித்த நுண்ணறிவுப் பிரிவு போலீஸார், அந்த தீவிரவாதி களின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.
மேலும், துண்டு பிரசுரங் களில் 4 பேரின் புகைப்படங் களை பெரிய அளவில் போட்டு, அதை பொதுமக்களிடம் கொடுத்து வருகின்றனர். 4 தீவிர வாதிகள் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொள்ள அறிவுறுத் தியுள்ளனர்.
இதற்கிடையே, முதல்வர் பழனிசாமியின் வீடு சேலத்தில் இருப்பதால் அந்த பகுதி முழுவதும் பலத்த பாது காப்பு போடப்பட்டுள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
தீவிரவாதிகள் அங்கிருந்து வேறு இடங்களுக்குச் சென்றி ருக்கலாம் என்ற சந்தேகமும் போலீஸாரிடம் உள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் முக்கிய சாலைகளில் போலீ ஸார் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உளவுத் துறை போலீஸார் ரகசிய சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்துக்குள் தீவிரவாதி கள் ஊடுருவல், குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்ததால் தமிழகத்தில் தாக்குதல் நடத்த திட்டம், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கையெறி வெடிகுண்டுகள் சிக்கியது, தலைமைச் செயலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் போன்ற அனைத்தும் ஒரே நேரத்தில் வந்திருப்பது போலீஸாரிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.