

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவகலம் உள்ளிட்ட தலைமை அலுவலகங்கள் அனைத்தும், தென்காசி நகர எல்லைக்குள் அமைத்திட தமிழக அரசை வலியுறுத்தி இன்று கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்காசி மாவட்ட அனைத்து பொதுமக்களின் நலன்கருதியும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து தலைமை அலுவலகங்களையும் பொதுமக்கள் அச்சமின்றி எளிதில் வந்துசெல்லும் இடமாக அமைத்திட வேண்டும்.
தற்போது தேர்வு செய்யப்பட்ட பகுதி நான்கு பக்கங்களும் குளங்கள் சூழ்ந்துள்ளது , நீர்ப்பிடிப்பு பகுதி, விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் தற்போது சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை அப்பகுதியில் கட்டினால் காலப்போக்கில் அந்த 4 குளங்களும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி அப்பகுதியில் விவசாயம் அழிந்துவிடும்.
எனவே புதிய ஆட்சியர் அலுவலகம் மற்றம் தலைமை அலுவலகங்கள் அனைத்தையும் தென்காசி நகர எல்லைக்குள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெற்ற இந்த கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு திமுக மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமை வகித்தார்.
கடையநல்லூர் சட்டப் பேரவை உறுப்பினர் முகம்மது அபுபக்கர், மதிமுக மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், காங்கிரஸ் நிர்வாகிகள் பொன்.பாண்டியன், காஜாமுகைதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் டேனியல் அருள்சிங், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட செயலாளர் செய்யதுசுலைமான், மார்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி சார்பில் கணபதி, இந்திய கம்யூனிஸ் கட்சி சார்பில் காசிவிஸ்வநாதன், ஆதிதமிழர்பேரவை கலிவரதன், மூவேந்தர் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் பெருமாள்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திமுக தென்காசி நகர திமுக செயலாளர் சாதீர் வரவேற்றார். மதிமுக ஒன்றிய செயலாளர் ராம உதயசூரியன் தொகுத்து வழங்கினார். முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர்கள் ரசாக், சதன்திருமலைக்குமார். திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என திரளானோர் கலந்துகொண்டனர்.