

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த ஏப்ரல் 7-ம் தேதி திருவண்ணாமலை, தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த 20 கூலித் தொழிலாளர்களை, செம்மரம் கடத்தியதாகக் கூறி ஆந்திர சிறப்பு காவல் படையினர் சுட்டுக் கொன்றனர்.
இது தொடர்பாக ஆந்திர உயர் நீதிமன்றத்தில் நடக் கும் வழக்கில் தமிழக அரசும் தன்னை ஒரு தரப்பாக இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்து வதற்காக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க கடந்த ஜூலை 15-ம் தேதி அனுமதி கேட்டோம். இதுவரை அனுமதி கிடைக்கவில்லை.
இப்பிரச்சினை குறித்து சந்திக்க நேரம் கேட்டதும் 24 மணி நேரத்துக்குள் பிரதமர் நரேந்திர மோடி அனுமதி தந்தார். 20 தமிழர்கள் கொலையில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என என்னிடம் பிரதமர் மோடி கூறினார்.
இந்நிலையில், படுகொலையான 20 தமிழர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து வந்து முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க வைக்க ஏற்பாடு கள் நடந்தன. அதற்கு அவர்கள் ஒப்புக் கொள்ள வில்லை. ஆனால், சித்தேரி மலையில் வசிக்கும் 7 பேரின் குடும்பத்தினரை ஆகஸ்ட் 5-ம் தேதி சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர். படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரை அச்சுறுத்தும் செயல்களில் தமிழக அரசு ஈடுபடக் கூடாது.
இவ்வாறு அறிக்கையில் வைகோ கூறியுள்ளார்.