பொன்.ராதாகிருஷ்ணன்: கோப்புப்படம்
பொன்.ராதாகிருஷ்ணன்: கோப்புப்படம்

திமுகவைக் கண்டித்து டிச.20-ம் தேதி தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்: பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

Published on

திமுகவைக் கண்டித்து தமிழக பாஜக சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தேசிய குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்கள் நடைபெற்று வருகின்றன. திமுக இச்சட்டத்தை தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இச்சட்டம் முஸ்லிம்களையும், இலங்கை தமிழர்களையும் வஞ்சிப்பதாகக் கூறி, நேற்று மாநில அளவிலான போரட்டத்தை திமுக நடத்தியது.

இந்நிலையில், சென்னை, கமலாலயத்தில் இன்று (டிச.18) செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், திமுக மக்களை சாதி, மத ரீதியாக பிளவுபடுத்தி, சூழ்ச்சி செய்து ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்வதாக குற்றம் சாட்டினார். குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் திமுகவைக் கண்டித்து வரும் 20-ம் தேதி, பாஜக சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.

குடியுரிமை விவகாரத்தில், இலங்கைத் தமிழர்களின் கருத்துகளைக் கேட்டு முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in