Published : 18 Dec 2019 05:23 PM
Last Updated : 18 Dec 2019 05:23 PM

சோ.தர்மனின் ‘சூல்’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது

019-ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருதுக்கு கோவில்பட்டியைச் சேர்ந்த எழுத்தாளர் சோ.தர்மன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் பல்வேறு மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டு தோறும் விருதுகள் வழங்கப்படு கின்றன. 2019-ம் ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியலை இறுதி செய்வதற்காக சாகித்ய அகாடமியின் தேசிய நிர்வாகக் குழுக் கூட்டம் புதுடெல்லியில் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட் டத்துக்குப் பிறகு, விருது பெறு வோர் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதன்படி, 2019-ம் ஆண்டின் தமிழ் மொழிக்கான விருதுக்கு எழுத்தாளர் சோ. தர்மன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் எழுதிய ‘சூல்’ என்ற நாவலுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

தமிழகத்தின் தென்கோடியி லுள்ள மக்களின் வேளாண்மை யோடு ஒன்றரக் கலந்த வாழ்க் கையையும், அவர்களது இயற்கை சார்ந்த அறிவையும், நீர் மேலாண் மையில் அவர்களுடைய ஆழ்ந்த புலமையையும், நவீன அறிவிய லால் அவையெல்லாம் காணும் சரிவுகளையும் அந்த நிலத்தின் மணத்தோடு பேசும் ‘சூல்’ நாவலை ‘அடையாளம்’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டியைச் சேர்ந்த சோ.தர்மன் (66) இதுவரை 13 நூல்கள், 8 சிறு கதை தொகுப்புகள், 4 நாவல் கள் எழுதியுள்ளார்.வில்லிசை குறித் தும் ஆய்வு நூல் வெளியிட்டுள்ளார்.

ஏற்கெனவே தமிழக அரசு சார்பில் 2 முறை விருது பெற்றுள் ளார். இவரது ‘கூகை’ நாவல் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத் தால் மொழி பெயர்க்கப்பட்டுள் ளது. மலையாளத்தில் ‘மூங்கா’ என்ற பெயரில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.

விருது குறித்து எழுத்தாளர் சோ.தர்மன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 1947-ல் சுதந்திரம் கிடைத்தபோது, தமிழகத்தில் 39,640 கண்மாய்கள் இருந்தன. அந்த கண்மாய்களின் இன்றைய நிலை என்ன என்பதே ‘சூல்’ நாவலின் மையக்கரு. அடிப்படை யில் நான் ஒரு விவசாயி. 10 ஏக்கர் காட்டை தண்ணீர் இல்லாமல் தரி சாக போட்டுவிட்டு இங்கு வந்து உட்கார்ந்துள்ளேன். இதுதான் இந்த நாவலை எழுத தூண்டுதலாக இருந்தது.

கண்மாய்கள் முன்பு அந்தந்த கிராமத்தின் வசம் இருந்தன. கிராம மக்களே அதில் மராமத்து பணிகளை மேற்கொண்டனர். இப் போது கண்மாயில் 4 அரசு துறை களின் அனுமதியில்லாமல் ஒரு கைப்பிடி மண் கூட அள்ள முடி யாது. எங்களது மண் அது. அந்த மண்ணை நான் எடுக்கக்கூடாது என்றால் என்ன நியாயம்?

இதுகுறித்து நான் எழுதிய கட்டுரையை ‘இந்து தமிழ்’ நாளிதழ் பிரசுரித்துள்ளது. கண்மாய்களை மராமத்து பார்க்காததும், மண் எடுக்க விடாததுமே, விவசாயம் முழுமையாக நலிவுறுவதற்கு காரணம் என அக்கட்டுரையில் எழுதியுள்ளேன்.

கண்மாய்களைப் பற்றி பேசக் கூடிய நாவலுக்கு ‘சூல்’ என்று பெயர் வைத்தேன். சூல் என்றால், நிறைசூலி. உயிரை உற்பத்தி பண்ணக்கூடியவள். பிரசவிக்கும் தாயாகத்தான் அந்த நாவலை உருவகப்படுத்தி உள்ளேன். இந்த விருதை எனது உருளைக்குடி கிராம மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன். தமிழக அளவில் அறியப்பட்ட எழுத்தாளர்கள் கோவில்பட்டியில் உள்ளனர். சர்வதேச விருது, சாகித்ய அகாடமி விருது வாங்கியவர்களும் உள்ளனர். இதற் கெல்லாம் காரணம் எங்களது குரு கி.ராஜநாராயணன்தான் என்றார்.

முதல்வர் வாழ்த்து

சாகித்ய அகாடமி விருது பெற்ற சோ.தர்மனுக்கு முதல்வர் பழனி சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சாகித்ய அகாடமியின் விருது பட்டியலில் 23 மொழிகளைச் சேர்ந்த படைப்பாளர்களின் பெயர் கள் இடம்பெற்றுள்ளன. கவிதை தொகுப்புகளுக்கு 7 விருதுகள் கிடைத்துள்ளன. போடோ, இந்தி, கொங்கனி, மைதிலி, மலையாளம், மராத்தி மற்றும் சமஸ்கிருதம் மொழி படைப்பாளர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன. நாவல்கள் பிரிவில் 4 படைப்புகள் விருதுகளை வென்றுள்ளன. தமிழ், அஸாமி, மணிப்புரி மற்றும் தெலுங்கு மொழி நாவலாசிரியர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

காஷ்மீரி, ஒடியா, பஞ்சாபி, ராஜஸ்தானி, சிந்தி மற்றும் சந்தாலி மொழி படைப்பாளர்களுக்கு சிறு கதை பிரிவில் விருது அறிவிக் கப்பட்டுள்ளது. புனைவற்ற படைப்பு, சுயசரிதை, வாழ்க்கை வரலாறு பிரிவுகளில் முறையே ஆங்கிலம், கன்னடம், உருது மொழி படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுரை பிரிவில் பெங்காலி, தோக்ரி மற்றும் குஜராத்தி மொழி படைப்பாளர்கள் விருது பெறுகிறார்கள்.

2013-ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கும், 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் வெளியான படைப்புகள் விருதுக்கு பரிசீலிக்கப்பட்டன. ஒவ்வொரு மொழியிலும் தனித்தனி தேர்வுக்குழு அமைக்கப்பட்டு, சிறந்த நூல்கள் தேர்வு செய்யப் பட்டன. தமிழ் மொழியில் விருதுக் கான படைப்பை கவிஞர் புவியரசு, முனைவர் கே.செல்லப்பன், எழுத் தாளர் சிவசங்கரி ஆகியோரைக் கொண்ட நடுவர் குழுவினர் தேர்வு செய்தனர்.

தேர்வு செய்யப்பட்ட சிறந்த படைப்பாளிகள் ஒவ்வொரு வருக்கும் ரூ.1 லட்சத்துக்கான காசோலை மற்றும் செப்பு பட்டயம் அடங்கிய சாகித்ய விருது வழங்கப்படும். இதற்கான விழா வரும் பிப்.25-ம் தேதி புது டெல்லியில் நடைபெறும்.

சசிதரூருக்கு விருது

ஆங்கிலப் பிரிவில் முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங் கிரஸ் தலைவருமான சசி தரூருக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத் துள்ளது. கேரள மாநிலம் திருவனந் தபுரம் தொகுதி எம்.பி.யான சசிதரூர் பல்வேறு புத்தகங்களை எழுதியுள் ளார். ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் குறித்து ஆங்கிலத்தில் அவர் எழுதிய ‘ஆன் எரா ஆஃப் டார்க் னஸ்: தி பிரிட்டிஷ் எம்பயர் இன் இந்தியா’ புத்தகம் பெரும் வர வேற்பை பெற்றது.

ஆங்கிலத்தில் வெளிவந்து ஏகோபித்த வரவேற்பை பெற்ற இந்த நூல் பிற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

அவர் எழுதிய இந்த புத்தகத் துக்கு 2019-ம் ஆண்டுக்கான கதை கள் அல்லாத பிரிவின்கீழ் ஆங் கில புத்தகத்துக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x