நூதன மோசடியில் ஈடுபட்ட வங்கி ஊழியர் சிக்கினார்: குன்றத்தூர் போலீஸார் தீவிர விசாரணை

நூதன மோசடியில் ஈடுபட்ட வங்கி ஊழியர் சிக்கினார்: குன்றத்தூர் போலீஸார் தீவிர விசாரணை
Updated on
1 min read

குன்றத்தூர்

குன்றத்தூரில் வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2.20 லட்சத்தை கையாடல் செய்த இந்தி யன் ஓவர்சீஸ் வங்கி ஊழியரை போலீஸார் கைது செய்தனர்.

குன்றத்தூர் அடுத்த கெலடிப் பேட்டை, அண்ணா தெருவைச் சேர்ந்தவர் ஈஸ்வரி. இவர் குன்றத் தூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தனது மகனின் திருமணத் துக்காக ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை வங்கிக் கணக்கில் சேமித்து வைத்திருந்தார். தற்போது தனது வங்கி கணக்கை ஆய்வு செய்தபோது அதில் பணம் இல்லாத தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

காஞ்சிபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அதிகாரிகளி டம் புகார் அளித்ததையடுத்து வங்கி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டபோது, அதே வங்கி யில் உதவியாளராக வேலை செய்து வந்த பழனிவேல் என்பவர் கையாடல் செய்தது தெரியவந்தது. இதையடுத்து குன்றத்தூர் போலீ ஸில் வங்கி சார்பில் புகார் அளிக் கப்பட்டது.

போலீஸார் விசாரணையில் ஈஸ்வரியின் வங்கி கணக்கின் ரகசிய எண்ணை தெரிந்து வைத் துக்கொண்டு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை சிறுகச் சிறுக ரூ.2 லட்சத்து 20 ஆயிரத்தை பழனிவேல் எடுத்து கையாடல் செய் திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து குன்றத்தூர் போலீ ஸார் பழனிவேலை கைது செய்த னர். இதன்மூலம் மேலும் பலரது வங்கிக் கணக்கில் இருந்து ஏடிஎம் மூலமும் மொபைல் போன் எண் மாற்றப்பட்டும் பணம் மோசடி செய்திருக்கலாம் என போலீஸா ருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் பழனிவேலிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

வாடிக்கையாளர்களுக்கே தெரி யாமல் அவர்களது வங்கிக் கணக் கில் இருந்து திருடி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. மேலும், வங்கியில் பழனிவேல் பயன்படுத்திய பாஸ் வேர்டு மூலம் வேறு மோசடியில் ஈடுபட்டுள்ளாரா என சரி பார்க் கும் பணியில் வங்கி அதிகாரி கள் ஈடுபட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in