

கொடைக்கானல் மேல்மலை கவுஞ்சி கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் உள்ள 9-வது வார்டை பூண்டி கிராமத்துடன் சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவ்வித்து தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
அதுவும், நேற்றைய தினம் வேட்புமனுக்களைப் பெறுவதற்கான நிறைவு நாளில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தேர்தல் புறகணிப்பு போஸ்ட்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி தேர்தல் டிச.27, டிச.30 என இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மேல்மலை கிராமத்தில் கவுஞ்சி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர் ஒட்டினர்.
முன்னதாக தங்கள் ஊராட்சியில் உள்ள 7, 8, 9,வார்டுகளில் 9வது வார்டை பூண்டி கிராமத்துடன் இணைத்ததற்க்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கடந்த வாரம் கொடைக்கானல் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து கோட்டாட்சியர் கிராம மக்களிடம் ஏற்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
இதனையடுத்து, கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கவுஞ்சி கிராமமக்கள் வருகிற 30-ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலைப் புறக்கணிக்க போவதாக போஸ்ட்டர் ஒட்டினர்.
ஆனால், ஒட்டுமொத்த கவுஞ்சி ஊராட்சி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்த போது திமுகவினர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.