

சென்னை துறைமுகத்தை இணைக் கும் எண்ணூர்-மணலி சாலைத் திட்டத்தை செயல்படுத்துவதில் பிரச்சினை இன்னும் ஒரு மாதத் துக்குள் தீர்க்கப்படும்’’ என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை துறைமுகத்தில் ரூ.151 கோடி மதிப்பிலான 11 திட்டங்களின் தொடக்க விழா நேற்று துறைமுக வளாகத்தில் நடைபெற்றது. மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை யமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று திட்டங்களை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துறைமுகத் தலைவர் அதுல்யமிஸ்ரா, துணைத் தலைவர் ஜெயக்குமார், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை தனி செயலாளர் சி.செந்தில் பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
சென்னை துறைமுக வளர்ச்சி யில் இன்றைய தினம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தின மாகும். ரூ.151 கோடி மதிப்பிலான 11 திட்டங்கள் தொடங்கி வைக் கப்பட்டுள்ளன. நாட்டில் 12 பெரிய மற்றும் 200 சிறிய துறைமுகங்கள் உள்ளன. சாலை, ரயில் போக்கு வரத்துக்கு இணையாக நீர்வழி போக்குவரத்தில் துறைமுகங்கள் அதிகப்படியான பங்களிப்பை அளித்து வருகின்றன.
சென்னை துறைமுகம் கடந்த நிதியாண்டில் ரூ.173 கோடி இழப்பை சந்தித்தது. தற்போது ரூ.23 கோடி லாபம் ஈட்டியுள்ளது. எண்ணூர்-மணலி சாலை திட்டம் (எம்ரிப்), மதுரவாயல் மேம்பால சாலை திட்டம் ஆகியவற்றை விரை வாக நடத்தி முடிக்க தமிழக அர சுடன் பேச்சுவார்த்தை நடத்தப் பட்டுள்ளது. இதில், எண்ணூர் சாலை திட்டத்தில் சாலையை விரிவாக்கம் செய்வதில் 900 மீட்டர் தூரத்துக்கு மட்டும் பிரச்சினை உள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் இப்பிரச்சினை சரி செய்யப்படும் என நம்புகிறோம்.
மேலும், மதுரவாயல் மேம்பால திட்டம் தொடர்பாக தற்போது நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. நீதிமன்றத்துக்கு வெளியே பிரச் சினையைத் தீர்த்துக் கொள்ள விரும்புகிறோம். அல்லது இத்திட்டத்தில் சிறிய மாற்றங்கள் செய்யவோ அல்லது முற்றிலுமாக புதிய வழித்தடத்தில் இத்திட்டத்தை நிறைவேற்றவோ தமிழக அரசு விரும்பினால் அதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.
தேசிய நீர்வழிச் சாலைத் திட்டத் தின் கீழ், காக்கிநாடாவில் இருந்து பங்கிங்காம் கால்வாய் வழியாக புதுச்சேரிக்கு சரக்குப் போக்கு வரத்தை மேற்கொள்ள ரூ.123 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட் டத்தை முடிக்க தமிழக அரசின் ஒத்துழைப்பு தேவை.
குளச்சல் துறைமுகம் சர்வ தேச கப்பல்கள் செல்லும் வழித் தடத்தில் அமைந்துள்ள இயற் கைத் துறைமுகம். இத்துறை முகத்தை செயல்படுத்த அதை மத்திய அரசிடம் ஒப்படைக்கக் கோரி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். இத்துறைமுகம் பயன்பாட்டுக்கு வரும் போது கன்னியாகுமரி, நெல்லை, ராம நாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்கள் பயனடையும்.
இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.