

உள்ளாட்சித் தேர்தல் பணிகளை மேற் கொள்ள திமுகவில் மாவட்ட பொறுப் பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் பணிகளை மேற்கொள்ள திமுக கட்சி ரீதியாக உள்ள மாவட்டங்களுக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன் விவரம்:
திருவள்ளூர் வடக்கு - ஜெ.அன்பழகன், திருவள்ளூர் தெற்கு - பி.கே.சேகர்பாபு, திருவண்ணாமலை வடக்கு - தாயகம் கவி, திருவண்ணாமலை தெற்கு - கே.எஸ்.ரவிச்சந்திரன், கடலூர் கிழக்கு - க.பொன்முடி, கடலூர் மேற்கு - மாதவரம் எஸ்.சுதர்சனம், தஞ்சை வடக்கு - வசந்தம் கார்த்திகேயன், தஞ்சை தெற்கு - செஞ்சி மஸ்தான், நாகை வடக்கு - எஸ்.ஆர்.ராஜா, நாகை தெற்கு - எஸ்.அரவிந்த் ரமேஷ், திருவாரூர் - ஜெ.எல்.ஈஸ்வரப்பன்,
திருச்சி வடக்கு - ப.ரங்கநாதன், திருச்சி தெற்கு - ஏ.பி.நந்தகுமார், பெரம்பலூர் - வேளச்சேரி மணிமாறன், அரியலூர் - பாலவாக்கம் சோமு, கரூர் - காசிமுத்து மாணிக்கம், புதுக்கோட்டை வடக்கு - மா.சுப்பிரமணியன், புதுக்கோட்டை தெற்கு - இ.கருணாநிதி,
சேலம் கிழக்கு - திருச்செங்கோடு எம்.கந்தசாமி, சேலம் மத்தியம் - திருநெல்வேலி அப்துல் வகாப், சேலம் மேற்கு - கரூர் ம.சின்னசாமி, நாமக்கல் கிழக்கு - ஆர்.டி.சேகர், நாமக்கல் மேற்கு - ஏ.நல்லதம்பி, தருமபுரி - டி.எம்.செல்வகணபதி, கிருஷ்ண கிரி கிழக்கு - ஆர்.காந்தி, கிருஷ்ணகிரி மேற்கு - தா.உதயசூரியன், கோவை வடக்கு - மு.அப்பாவு, கோவை தெற்கு - மீ.அ.வைத்தியலிங்கம், திருப்பூர் வடக்கு - கோவை நா.கார்த்திக், திருப்பூர் தெற்கு - த.மஸ்தான், ஈரோடு வடக்கு - பூங்கோதை ஆலடி அருணா, ஈரோடு தெற்கு - பொ.சிவபத்மநாதன்,
நீலகிரி - பொங்கலூர் நா.பழனிசாமி, மதுரை வடக்கு - தா.மோ.அன்பரசன், மதுரை தெற்கு - க.சுந்தர், திண்டுக்கல் கிழக்கு - இரா.ஆவுடையப்பன், திண்டுக்கல் மேற்கு - டிபிஎம் மைதீன்கான், தேனி - சிவிஎம்பி எழிலரசன், ராமநாதபுரம் - பொன்.முத்து ராமலிங்கம், சிவகங்கை - பெ.குழந்தை வேலு, விருதுநகர் வடக்கு - சா.ஞான திரவியம், விருதுநகர் தெற்கு - தி.அ.முகமது சகி, தூத்துக்குடி வடக்கு - செஞ்சி சிவா, தூத்துக்குடி தெற்கு - வேலூர் ப.கார்த்திகேயன், கன்னியாகுமரி கிழக்கு - நெல்லை ஆ.துரை, கன்னியாகுமரி மேற்கு - வழக்கறிஞர் வீ.கண்ணதாசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான பிரச்சினைகளுக்கு சட்ட ஆலோசனைகள் பெறுவதற்காக மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தலைமையில் வழக்கறிஞர்கள் இரா.கிரிராஜன், எம்.ஷாஜகான், வி.அருண், ப.முத்துகுமார், இரா.நீலகண்டன், ப.கணேசன், ஜெ.பச்சையப்பன், ஆர்.கிருஷ்ணராஜா, வி.வேலுசாமி ஆகியோரைக் கொண்ட சட்ட ஆலோசனைக் குழுவையும் திமுக அமைத்துள்ளது.