

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, அதிமுகவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள் தலைமையில் மாவட்ட வாரியாக 38 தேர்தல் பணிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 27, 30-ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது.
இதையடுத்து, தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், தேர்தல் பணிகளை மேற்கொள்ள மாவட்ட வாரியாக 38 குழுக்களை அதிமுக அமைத்துள்ளது.
அதன்படி, தஞ்சை மேற்கு - ஆர்.வைத்திலிங்கம், சேலம் புறநகர்- சி.பொன்னையன், கன்னியாகுமரி மேற்கு- அ.தமிழ்மகன் உசேன், திண்டுக்கல் - திண்டுக்கல் சீனிவாசன், ஈரோடு புறநகர், மாநகர் - கே.ஏ.செங்கோட்டையன், திருப்பூர் புறநகர்- பெள்ளாச்சி ஜெயராமன், நாமக்கல் - பி.தங்கமணி, கோவை புறநகர், மாநகர் - எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், திருவள்ளூர் மேற்கு - டி.ஜெயக்குமார், கன்னியாகுமரி கிழக்கு - என்.தளவாய்சுந்தரம், மதுரை புறநகர், கிழக்கு - செல்லூர் கே.ராஜூ, கடலூர்மேற்கு - சி.வி.சண்முகம், தருமபுரி - கே.பி.அன்பழகன், திருவண்ணாமலை வடக்கு - ஜே.சி.டி.பிரபாகர், திருவள்ளூர் கிழக்கு - கோகுல இந்திரா, ராமநாதபுரம் - அன்வர்ராஜா, மதுரை புறநகர் மேற்கு - ஆர்.பி.உதயகுமார், தேனி - எஸ்.டி.கே.ஜக்கையன், கடலூர் மத்தியம் - எம்.சி.சம்பத், திருவாரூர் - ஆர்.காமராஜ், நாகை - ஓ.எஸ்.மணியன், புதுக்கோட்டை - சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல், தஞ்சை வடக்கு - ஆர்.துரைக்கண்ணு, தூத்துக்குடி வடக்கு - கடம்பூர் ராஜூ, திருச்சி மாநகர் - வெல்லமண்டி நடராஜன், திருவண்ணாமலை தெற்கு - கே.சி.வீரமணி, விருதுநகர் - கே.டி.ராஜேந்திரபாலாஜி, கரூர்- எம்.ஆர்.விஜயபாஸ்கர், தூத்துக்குடி தெற்கு -வி.எம்.ராஜலட்சுமி, சிவகங்கை - ஜி.பாஸ்கரன், அரியலூர்- எஸ்.வளர்மதி, திருப்பூர் மாநகர் - யு.ஆர்.கிருஷ்ணன், திருச்சி புறநகர் - தாடி ம.ராசு, நீலகிரி - ஏ.கே.செல்வராஜ், கடலூர் கிழக்கு - ப.மோகன், பெரம்பலூர் - வரகூர் அ.அருணாசலம் ஆகியோர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்குழுக்களில் மாவட்டச் செயலாளர்கள், அதிமுக முக்கிய நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர். தேர்தல் நடைபெறாத மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும் தங்களுக்கு அருகில் உள்ள மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழுவினருக்கு முழு ஒத்துழைப்பு அளித்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.