ஜனவரி முதல் வாரத்தில் சட்டப்பேரவை கூடுகிறது

ஜனவரி முதல் வாரத்தில் சட்டப்பேரவை கூடுகிறது
Updated on
1 min read

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம், வழக்க மாக ஆளுநர் உரையுடன் தொடங்கும். அந்த வகையில், 2016-ம் ஆண்டு அமைக்கப்பட்ட 15-வதுசட்டப்பேரவையின் 8-வது கூட்டம்,வரும் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் பேரவைதொடங்கும் நாளில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுவார். முன்னதாக, 2019-ம் ஆண்டின்முதல் கூட்டம் கடந்த ஜனவரி 2-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி ஜன.8-ம் தேதி வரைநடந்தது. அதையடுத்து பிப்ரவரிமாதம் பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மக்களவைத் தேர்தல் வந்ததால், நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்துடன் பேரவை கூட்டத் தொடர் தள்ளிவைக்கப்பட்டது.

அதன்பின், துறை வாரியான மானியக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக ஜூன், ஜூலை மாதங்களில் 17 நாட்கள் பேரவை கூட்டத் தொடர் நடைபெற்றது. அத்துடன், 7-வது கூட்டத்தொடர் முடித்து வைக்கப்பட்டது.

சட்டப்பேரவையைப் பொறுத்த வரை ஒரு கூட்டத் தொடர் முடி வடைந்து 6 மாதங்களுக்குள் அடுத்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். அதன்படி, ஜன.20-ம் தேதிக்குள் அடுத்த கூட்டம் நடத்தபட வேண்டும். ஜனவரி 12,13 தேதிகள்சனி, ஞாயிறு அரசு விடுமுறை, ஜன.14-ம் தேதியில் இருந்து பொங்கல் விடுமுறை தொடங்கும்என்பதால் அப்போது சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற சாத்தியமில்லை. எனவே, ஜன.6-ம் தேதி திங்கள்கிழமை கூட்டத்தொடர் தொடங்க வாய்ப்புள்ளதாக சட்டப்பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in