Published : 17 Dec 2019 08:06 AM
Last Updated : 17 Dec 2019 08:06 AM

உள்ளூரிலேயே சர்வதேச விலை கிடைப்பதால் கிறிஸ்துமஸ் பண்டிகை மலர் ஏற்றுமதி குறைய வாய்ப்பு பிளாஸ்டிக் மலர் பயன்பாடு அதிகரிப்பால் விவசாயிகளுக்கு பாதிப்பு

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வீடு, தேவாலயம் உள்ளிட்ட இடங்களில் மலர் அலங்காரம் செய்யப்படுவது வழக்கம். இதற்காக சிவப்பு மற்றும் வெள்ளை நிற ரோஜா மலர்கள், ஜெர்பரா, கார்னேசன், ஹைபிரிட் சாமந்தி மலர்களை அதிக அளவில் பயன்படுத்துவார்கள். குறிப்பாக வெளிநாடுகளில் இந்த மலர்களின் தேவை அதிகம். இதனால், இந்திய விவசாயிகள் பலர் பசுமை குடில் அமைத்து அலங்கார மலர் உற்பத்தியில் ஈடுபடுகின்றனர்.

தமிழகத்தில் மதுரை, கோவை, திருச்சி, சென்னையில் இருந்தும், கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு வில் இருந்தும் விவசாயிகள் அதிக அளவில் மலர்களை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்ற னர். ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 25 லட்சம் அலங்கார மலர் கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகும்.

ஆனால் இந்த ஆண்டு சர்வதேச சந்தையில் மலர்களுக்கு கிடைக் கும் விலை, உள்ளூர் சந்தைகளி லேயே கிடைக்கிறது. இதனால், வெளிநாட்டு ஏற்றுமதி 50 சதவீதத் துக்கு மேல் குறைய வாய்ப்புள்ள தாக மலர் விவசாயிகள் தெரி வித்துள்ளனர்.

பசுமை குடில்கள்

தமிழகத்தில் மதுரை, கிருஷ்ணகிரி, நீலகிரி, திண்டுக்கல், கோவை, ஈரோடு உள்ளிட்ட இடங்களில் அதிக அளவில் அலங்கார மலர் சாகுபடி நடைபெறுகிறது. குறிப்பாக நீலகிரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பசுமை குடில்கள் அமைத்து ஏற்றுமதி ரக ரோஜா மலர் உற்பத்தி நடைபெறுகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு கொண்டாட்டம் நெருங்கி விட்ட நிலையிலும் இந்த மாவட்டங்களில் வெளிநாட்டு மலர் ஏற்றுமதி விறுவிறுப்பு அடையவில்லை. அதற்கான ஆர்வமும் விவசாயிகளிடம் இல்லை.

இதுகுறித்து மலர் ஏற்றுமதியாளர் சிவா கூறியதாவது:

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இயற்கை மலர்களைத் தவிர்த்து செயற்கையான பிளாஸ்டிக் மலர் களைப் பொதுமக்களும், விழா ஏற் பாட்டாளர்களும் அதிக அளவு பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.

இதனால், சர்வதேச சந்தைகளில் இயற்கையாக உற்பத்தி செய்யப்படும் அலங்கார மலர் களுக்கு வரவேற்பு குறைந்து விட்டது. பிளாஸ்டிக் மலர் பயன்பாட்டால் விவசாயிகளின் வருமானம் குறைந்ததுடன், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது.

கடந்த வாரம் உள்ளூர் சந்தையில் ஏற்றுமதி ரக ரோஜா ஒன்று 15 ரூபாய்க்கு விற்றது. தற்போது 10 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதே விலைக்குதான் சர்வதேச சந்தைகளுக்கும் நாங்கள் ஏற்றுமதி செய்கிறோம். அதனால், விவசாயிகள் உள்ளூரிலேயே ஏற்றுமதி ரக மலர்களை விற்க ஆரம்பித்துவிட்டனர். உற்பத்தி பாதிப்பால் மலர் விலை உயர்ந் துள்ளது.

பொதுவாக கேரளாவில் கிறிஸ் துமஸ் கொண்டாட்டத்தை யொட்டி அலங்கார மலர்களுக்கான தேவை அதிகமாக இருக்கும். தற்போது அவர்கள் 80 சதவீதத்துக்கு மேல் பிளாஸ்டிக் மலர்களை பயன்படுத் துகின்றனர்.

தமிழகத்திலும் இதை பின்பற்றத் தொடங்கிவிட்டனர். பண்டிகை காலத்தில் இயற்கை மலர்களை அதிக அளவில் பயன்படுத்த பொது மக்கள் முன்வர வேண்டும். இவ் வாறு அவர் கூறினார்.

மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தை வியாபாரிகள் கூறும்போது, ‘‘தற்போது உள்ளூர் சந்தைகளில் ஒரு ‘பஞ்ச்’ சிவப்பு ரோஜா (20 மலர்கள்) ரூ.300, ஒரு பஞ்ச் வெள்ளை ரோஜா ரூ.250-க்கு விற்பனையாகிறது. மற்ற அலங்கார மலர்கள் விலையும் அதிகமாக உள்ளது. மழையால் மலர்கள் உற் பத்தி குறைந்ததால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x