

கவிஞர் மனுஷ்யபுத்திரன் உள்ளிட்டோருக்கு திமுக முப்பெரும் விழா விருதுகள் வழங்கப்படவுள்ளதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதியன்று திமுக முப்பெரும் விழா ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. அந்த, வகையில், இந்தாண்டு முப்பெரும் விழா மற்றும் முப்பெரும் விழா விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் செப்டம்பர் 15-ம் தேதி நடக்கவுள்ளது.
இந்த விழாவில், பெரம்பலூர் மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் ஆண்டிமடம் எஸ்.சிவசுப்ரமணியத்துக்கு பெரியார் விருதும், கர்நாடக மாநில திமுக அவைத்தலைவர் பெங்களூரு வி.தேவராசனுக்கு அண்ணா விருதும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பவானி ராஜேந்திரனுக்கு பாவேந்தர் விருதும், கவிஞர் மனுஷ்யபுத்திரனுக்கு கலைஞர் விருதும் வழங்கப்படவுள்ளது.
இவ்வாறு திமுக தலைமைக் கழகம் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.