

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள நிலையில், விருதுநகர் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான அதிகாரபூர்வ வேட்பாளர்களை அதிமுக அறிவித்துள்ளது.
தமிழக துணை முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வேட்பாளர்களை இன்று அறிவித்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு கடந்த 15-ம் தேதி அறிவிக்கப்பட்ட அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில், 2, 4, 5 ஆகிய வார்டுகள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படுகிறது என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.