Published : 02 Aug 2015 09:38 AM
Last Updated : 02 Aug 2015 09:38 AM

வறுமை நிலையிலும் தொடர்ந்து போராட்டம்: சசிபெருமாள் குடும்பத்தை காப்பாற்றிய கறவை மாடு - நன்கொடை வாங்காத நர்சரி பள்ளியும் மூடப்பட்டது

பூரண மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த தனது வறுமையையும் பொருட்படுத்தாமல் ஊர், ஊராகச் சென்று காந்தியவாதி சசிபெருமாள் உண்ணாவிரதம், உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், கறவை மாடு மூலம் கிடைத்த வருமானமே அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு உதவியுள்ளது.

சேலம் மாவட்டம், இடைப்பாடி அடுத்த இடங்கணசாலை, மேட் டுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் காந்தியவாதி சசிபெருமாள் (59). இவரது முதல் மனைவி சசிகலா, கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுவிட்டார். இவர் களுக்கு விவேக் (36), நவநீதன் (35) என்ற இருமகன்கள் உள்ளனர்.

சசிபெருமாளின் இரண்டாவது மனைவி மகிளம். இவர்களது மகள் கவியரசி(11), 5-ம் வகுப்பு படித்து வருகிறார். சசிபெரு மாளின் சகோதரர்கள் வெங்கடாஜலம், செல்வம். தங்கை கோவிந் தம்மாள். மகன்கள் இருவரும் சசிபெருமாளின் வீட்டு அருகே தனித் தனியாக வசித்து வருகின்றனர்.

சசிபெருமாளுக்கு பூர்வீக சொத்தாக 50 சென்ட் நிலம் உள்ளது. மேலும், அவர் பெயரில் ஐந்தரை சென்ட் நிலமும் உள்ளது. சசிபெருமாள் 10 பங்குதாரர்களுடன் சேர்ந்து தனது கிராமத்தில் சுதந்திரதேவி என்ற பெயரில் நர்சரி பள்ளியை நடத்தி வந்தார். அந்த பள்ளியில் நன்கொடை உள்ளிட்ட கட்டணங்கள் வசூலிக்காத நிலை யில், நிதி தட்டுப்பாடு காரணமாக தொடர்ந்து பள்ளியை நடத்த முடியாமல் மூடிவிட்டனர்.

சிறுவயதில் இருந்தே பூரண மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும் என ஊர் ஊராகச் சென்று போராட்டம், உண்ணாவிரதத்தில் சசிபெருமாள் ஈடுபட்டு வந்ததால், நிலையான வருமானம் ஏதுவும் அவருக்கு இல்லை. இருந்தபோதும் ஹோமியோபதி மருத்துவம் பார்ப்பதன் மூலம் கிடைத்த வருமானம் மூலம் வெளியூர்களுக்கு சென்று மதுவிலக்கு அமல்படுத்தும் போராட்டத்தில் சசிபெருமாள் ஈடுபட்டு வந்துள்ளார்.

பெரும்பாலான நாட்களை போராட்டத்தில் சசிபெருமாள் கழித்த நிலையில், வீட்டில் உள்ள கறவை மாடு மூலம் கிடைத்த வருமானத்தின் மூலம் அவரது மனைவி மகிளம் குடும்பத்தை நடத்தியுள்ளார். இரு மகன்களும் அவ்வப்போது, வீட்டுக்கு செல வுக்கு பணம் அளித்து வந்துள் ளனர்.

குடும்பத்தை காட்டிலும் மக்கள் நலனே பெரிது என்று எண்ணி மதுவிலக்கு கொள்கைக்காக போராடிய சசிபெருமாள், போராட்டக் களத்திலேயே உயிர் துறந்திருப்பதை உணர்ந்து அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x