வேட்புமனு தாக்கல் செய்ய ஆதரவாளர்களுடன் குவிந்த வேட்பாளர்கள்: விருதுநகரில் பரபரப்பு

வேட்புமனு தாக்கல் செய்ய ஆதரவாளர்களுடன் குவிந்த வேட்பாளர்கள்: விருதுநகரில் பரபரப்பு
Updated on
1 min read

நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் வேட்புமனு தாக்கல் செய்ய ஒன்றிய அலுவலகங்களில் குவிந்தனர்.

விருதுநகர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ம் தேதி தொடங்கியது. மொத்தம் 4,042 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று (திங்கள்கிழமை) கடைசி நாள் என்பதால் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிடுவதற்காக இன்று விருதுநகரில் உள்ள 11 ஒன்றிய அலுவலகங்களிலும் ஆயிரக்கணக்கான வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் குவிந்தனர்.

கிராமப்புறங்களில் இருந்து தங்களது ஆதரவாளர்களை மான்கள் மற்றும் கார்களில் வேட்பாளர்கள் அழைத்து வந்ததால் பல இடங்களில் வாகன போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று ஏராளமானோர் குவிந்ததால் 100 மீட்டர் தொலைவிலேயே அனைத்து வாகனங்களையும் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அதனால் விருதுநகர் கல்லூரி சாலையில் சங்கரலிங்கனார் மணிமண்டபம் அருகே உள்ள திறந்தவெளி மைதானத்தில் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டன. வேட்பாளர்கள் உடன் வந்த கிராமத்தினர் அனைவரும் அப்பகுதிகள் திரண்டதால் கல்லூரி சாலை இன்று திருவிழாக் கோலம் பூண்டிருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in