

காரைக்குடி அருகே சாக்கோட்டை ஒன்றியத்தில் கருநாவல்குடி, வீரசேகரபுரம், பெரியக்கோட்டை, புத்தன்பட்டி, புத்தன்வயல், சீரங்கவயல், வலையன்வயல், கமலைவயல் உள்ளிட்ட பகுதி களில் 100 ஏக்கர் நெற் பயிர்கள் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த ஈக்கள் மஞ்சள் கலந்த பழுப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ளன. ஈ தாக்கிய பயிர்களின் தூர்கள் (வேர்கள்) கொம்பு போன்று மாறியுள்ளன.
இதுகுறித்து கருநாவல்குடி விவசாயி சுப்ரமணியன் கூறி யது: 10 ஏக்கரில் நெற்பயிர் சாகுபடி செய்தேன். ஏக்கருக்கு ரூ.30,000 செலவழித்தேன். கடந்த காலங்களில் ஒரு சில நெல்கதிர் மட்டுமே ஆனைக்கொம்பன் ஈயால் பாதிக்கப்படும். இந்தாண்டு வயலில் அனைத்து பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன. மருந்து தெளித்தாலும் பயனில்லை. இதனால் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறினார்.
வேளாண் இணை இயக்குநர் வெங்கடேஸ்வரன் கூறியதாவது: மழை விட்டுவிட்டு பெய்யும்போது ஆனைக்கொம்பன் ஈ உற்பத்தி அதி கரித்து பாதிப்பும் அதிக மாகிறது. ஈ தாக்குதலில் இருந்து பாதுகாக்க களைகள் இல்லாமல் வைத்திருக்க வேண்டும். விளக்குப் பொறிகளை வைத்து அழிக்கலாம். பரிந்துரை அளவுக்கு மேல் தழைச்சத்து உரங்கள் பயன் படுத்தக் கூடாது.
சிலந்தியை அழிக்காமல் பாதுகாக்க வேண்டும். தயோ மெத்தாக்சிம் 25 டபுள்யுஜி 40 கிராம், கார்போசல்பான் 25 ஈசி 400 மி.லி., பிப்ரோனில் 5 என்சி 500 கிராம், குளோர்பைரியாஸ் 20 ஈசி 500 மி.லி ஆகிய பூச்சிக்கொல்லி மருந்துகளில் ஏதாவது ஒரு மருந்தை ஏக்கருக்கு 200 லி. நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கலாம் என்றார்.