ராம ராஜ்யம் இனிமேல்தான் வரப்போகிறது: ஸ்ரீ ஸ்ரீ நிவாச கோபால மஹாதேசிகன் கருத்து

ராம ராஜ்யம் இனிமேல்தான் வரப்போகிறது: ஸ்ரீ ஸ்ரீ நிவாச கோபால மஹாதேசிகன் கருத்து

Published on

ராம ராஜ்யம் இனிமேல்தான் வரப்போகிறது என்று ஸ்ரீ பவுண்டரீகபுரம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீ ஸ்ரீ நிவாச கோபால மஹாதேசிகன் தெரிவித்துள்ளார்.

அயோத்தி வழக்கில் ராமருக்காக வாதாடிய முன்னாள் அட்டர்னி ஜெனரல் கே.பராசரனுக்கு ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானம் சார்பில் சென்னையில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு, ஸ்ரீ பவுண்டரீக புரம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீ ஸ்ரீநிவாச கோபால மஹாதேசிகன் மற்றும் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்ட
வன் ஸ்ரீ வராஹ மஹாதேசிகன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

விழாவில், பராசரனை பாராட்டி ஸ்ரீ பவுண்டரீகபுரம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீ ஸ்ரீநிவாச கோபால மஹாதேசிகன் பேசிய
தாவது: கலியுகத்தில் தர்மத்தை பராசரன் காப்பாற்றிக் கொடுத்து சாதனை படைத்துள்ளார். ராமனை காப்பாற்றிக் கொடுத்
துள்ளார். இனி நம் அனைவருடைய ஒத்துழைப்பும் அவசியம் இருக்க வேண்டும். அனைவரும் நீங்காத செல்வம் நிறைந்து நன்றாக இருக்க வேண்டும். ராமன் சந்நிதியை சிறப்பாக அமைக்க வேண்டும். ராம ராஜ்யம் இனிமேல்தான் வரப்போகிறது. ராம ராஜ்யம் உயர்வாக இருக்கும். நன்றாக இருக்கும். அதில் எள்ளவும் சந்தேகம் இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் முன்னாள் அட்டர்னி ஜெனரல் பராசரன் பேசும்போது, ”அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வடக்கில் இருந்து
ஏற்கெனவே நிதி குவிந்து கொண்டிருக்கிறது. தீர்ப்பு வருவதற்காகத்தான் அனைவரும் காத்திருந்தனர்.

70 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த வழக்கில் சரியாக தீர்ப்பு வந்து இருக்கிறது. சீராய்வு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. விரைவில் ராமர் கோயில் கட்டி பூர்த்தி செய்யப்படும்" என்றார்.

இந்நிலையில், வேதபாராயண சபாவினரால் தனுர் மாத திருப்பாவை உபந்யாஸம் இன்று தொடங்கி வரும் ஜனவரி 14-ம் தேதி நிறைவடைகிறது. ஸ்ரீ பவுண்டரீகபுரம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீ ஸ்ரீநிவாச கோபால மஹாதேசிகன் தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணிவரை உபந்யாஸம் வழங்குகிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in