ஊரக உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக, திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக, திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
Updated on
1 min read

அதிமுக மற்றும் திமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டி யிடும் வேட்பாளர்களின் அடுத்தக் கட்ட பட்டியல்கள் நேற்று வெளியிடப்பட்டன.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப் பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப் பேட்டை, விழுப்புரம், கள்ளக் குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்கள் மற்றும் ஊரக உள்ளாட்சி நிர் வாகம் இல்லாத சென்னை என தமிழகத்தின் 10 மாவட்டங்கள் தவிர மீதம் உள்ள 27 மாவட் டங்களுக்கும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதைத் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அரசியல் கட்சியினர் வெளியிட்டு வருகின்றனர்.

அதிமுக சார்பில் நேற்று இரவு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப் பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு போட்டியிடும் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதன்படி கடலூர் கிழக்கு, கடலூர் மத்தி, கடலூர் மேற்கு, தர்மபுரி, ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர், திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர், கோவை மாநகர், கோவை புறநகர், புதுக்கோட்டை, திண்டுக் கல், கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு மாவட்டங் கள் ஆகிய பகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப் பாளர் கே.பழனிசாமி வெளியிட்டுள் ளனர்.

திமுக பட்டியல்

இதேபோல் திமுக சார்பில் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ளார்.

அதன்படி திருவண்ணாமலை வடக்கு,திருவண்ணாமலை தெற்கு, திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, கரூர், சேலம் மத்தி, சேலம் மேற்கு, கோவை தெற்கு, நீலகிரி, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு, திருவள்ளூர் வடக்கு, கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு, நாகை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, கோவை வடக்கு, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, சேலம் கிழக்கு, ஈரோடு தெற்கு, தருமபுரி, திண்டுக் கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு, மதுரை மாநகர், புதுக்கோட்டை வடக்கு, பெரம்பலூர், கிருஷ்ண கிரி கிழக்கு, விருதுநகர் வடக்கு ஆகிய 34 மாவட்டங்களுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in