‘மக்களே..! மாமாவுக்கு ஓட்டு போடுங்கோய்..!’ - நண்பரின் உறவினருக்கு வாக்கு சேகரித்த பிரான்ஸ் மாணவி

திருப்புவனம் அருகே மேலராங்கியம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மருதுபாண்டியருடன் பிரச்சாரம் செய்த பிரான்ஸ் மாணவி ஜூயி
திருப்புவனம் அருகே மேலராங்கியம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் மருதுபாண்டியருடன் பிரச்சாரம் செய்த பிரான்ஸ் மாணவி ஜூயி
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம், திருப் புவனத்தில் ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் நண் பரின் உறவினருக்காக பிரா ன்ஸ் நாட்டு மாணவி ஒருவர் வீதிவீதியாகச் சென்று வாக்குச் சேகரித்தார்.

திருப்புவனம் ஊராட்சி ஒன்றி யத்தில் 45 ஊராட்சிகளுக்கு டிச.27-ம் தேதி தேர்தல் நடை பெறுகிறது. திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று ஏராளமானோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

மேலராங்கியம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு மருது பாண் டியர் என்பவர் வேட்பு மனுத் தாக்கல் செய்ய ஊர்வலமாக வந்தார்.

அப்போது அவருடன் பிரான்ஸ் நாட்டு மாணவி ஜூயி என்பவரும் வந்தார். அவர், ‘மக்களே..! மாமாவுக்கு ஓட்டு போடுங்கோய்’ என உரத்த குரலில் கூறியவாறு வந்தார். இதை அவ்வழியே சென்றவர்கள் வியப்புடன் பார்த்தனர்.

வேட்பாளர் மருதுபாண்டி கூறுகையில், ‘எனது மருமகன் மூலம் ஜூயி அறிமுகமானார். தமிழகத்துக்கு சுற்றுலா வந்துள்ள அவர், நான் போட்டியிடுவதை அறிந்து எங்கள் கிராமத்தில் தங்கி தேர்தல் பிரச்சாரத்தை கவனித்து வருகிறார்’ என்றார்.

ஜூயி கூறுகையில், ‘நான் பள்ளிப் படிப்பை முடித்து விரைவில் கல்லூரியில் சேர உள்ளேன். தற்போது தமிழகத்துக்கு சுற்றுலா வந்தேன். எனது நண்பரின் உறவினர் தேர்தலில் நிற்பதால், அதைக் காண வந்தேன். இந்த தேர்தல் பிரச்சாரத்தால் வேட் பாளர்களுக்கும், மக்களுக்கும் நெருக்கம் ஏற்படுவதைப் பார்க் கிறேன்.

தமிழகக் கலாச்சாரம் சிறப்பாக உள்ளது. இங்குள்ள பெண்கள் நெற்றியில் பொட்டு வைத்திருப்பது பிடித்ததால், நானும் வைத்து கொண்டேன்’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in