Published : 15 Dec 2019 11:20 AM
Last Updated : 15 Dec 2019 11:20 AM

மின்சாரமின்றி இருளில் இயங்கும் பள்ளி: கழிவறைக்கு கூட தண்ணீரின்றி தவிக்கும் மாணவர்கள் 

மின்சாரமின்றி இருளில் இயங்கும் அரசு பள்ளியில் மாணவர்கள் பயில்கின்றனர். கழிவறைக்கு கூட தண்ணீர் இல்லாமல் அந்தப் பள்ளி மாணவர்கள் தவிக்கின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் ஒழிந்தியாம்பட்டு கிராமத் தில் அரசு உதவி பெறும் அருணாச் சலம் நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது.

102 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்தப் பள்ளியில் ஆண்டியார் பாளையம், நா- பாளையம், ராய ஒட்டை, ஒழிந்தியாம்பட்டு ஆகிய கிராமங்களை சேர்ந்த பெற்றோர் தங்கள் குழந்தைகளை சேர்ப்ப துண்டு. தற்போது 150 மாணவ. மாணவியர் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்தக் கிராமத்தில் உள்ள ஒரே ஒரு பள்ளி என்பதால் இதை நம்பியே இங்குள்ள மக்கள் உள்ளனர்.

அரசு நிதி உதவி பெறும் இப் பள்ளிக்கு பல மாதங்களாக நிதி இல்லாததால் அடிப்படை பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் மின்சார கட்டணம் செலுத்தப்படவில்லை. இதனால் இருளில் படிக்கும் அவல நிலைக்கு மாணவ, மாணவியர் தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், இந்தப் பள்ளிக்கு குடி நீருக்கு என தனி வசதி இல்லை.இதனால் கடந்த 4 ஆண்டுகளாக தினமும் 400 லிட்டர் தண்ணீரை தனியார் நிறுவனத்தில் இலவச மாக பெற்று வருகின்றனர். கழி வறை வசதியிருந்தும் தண்ணீர் தட்டுப்பாட்டால் அருகில் உள்ள தோப்புக்கு மாணவர்களும் ஆசிரி யர்களும் செல்ல வேண்டிய அவலம் நிலவுகிறது.

இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் ராமலிங்கம் கூறுகையில், " தமிழகத்தின் எல்லையோர பகுதிகளில் இருக்கும் இந்தக் கிராமத்தை ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளவில்லை. இது தொடர் பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சி யருக்கும் சட்டமன்ற உறுப்பின ருக்கும் கடிதங்கள் கொடுத்து காத்திருக்கிறோம்" என்று குறிப் பிட்டார்.

இதுதொடர்பாக விழுப்புரம் முதன்மை கல்வி அலுவலர் முனுசாமியிடம் கேட்டதற்கு, "கல்வித்துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். இரு நாட்களில் தண்ணீருக்காக ஆழ்குழாய் கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். ஊதியம் மட்டுமே அரசு தரப்பிலிருந்து தரப்படும். அரசு நிதியுதவி பெறும் பள்ளி என்பதால் இதர பணிகளுக்கான நிதியை நிர்வாகம்தான் ஒதுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x