திரைப்படம் பார்த்து நகைப்பறிப்பு: கைதான இளைஞர் வாக்குமூலம்
கோவை மாவட்டம் கருமத்தம் பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், கடந்த சில வாரங்களாக அடிக்கடி நகைப் பறிப்பு, வழிப்பறிப்பு சம்பவங்கள் நடந்தன. இவ்வழக்கில் தொடர்பு டையவர்களை பிடிக்க, காவல் ஆய்வாளர் சண்முகம் தலைமை யிலான போலீஸார் விசாரணை நடத்தினர்.
அதில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேற்கண்ட சம்பவங்களில் ஈடுபட்டதாக சரண் (20), கமலக்கண்ணன் (30), கோபாலகிருஷ்ணன் (19), சந்தோஷ்குமார் (26), பாண்டீஸ் வரன் (22) ஆகிய 5 பேரை கைது செய்தனர். விசாரணையின்போது, சரண் என்பவர் அளித்த வாக்குமூலம் போலீஸாரை அதிர்ச்சியடைய செய்தது.
இதுதொடர்பாக மாவட்ட காவல்துறையினர் கூறும்போது, ‘‘கைதுசெய்யப்பட்ட சரண் டிப்ளமோ படித்துள்ளார். சரிவர வேலைவாய்ப்பு இல்லாமல் இருந்தபோது, சமீபத்தில் வெளி யான ஒரு திரைப்படத்தை பார்த்துள்ளார். அதில், கதா நாயகனின் சகோதரர் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, நண்பர்களுடன் இணைந்து பெண்களிடம் நகைப்பறிப்பது, வழிப்பறி செய்வது உள்ளிட்ட வற்றில் ஈடுபடுவார். அதை பார்த்து ஈர்க்கப்பட்ட சரணும் நகைப்பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார்.
நகை பறிக்க தேர்வு செய்யப் படும் பகுதிகளைச் சுற்றியுள்ள அனைத்து வீதிகளையும் நன்கு அறிந்துகொண்டு, தனியாக வரும் பெண்களிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார். கருமத்தம் பட்டி, அன்னூர், சத்தியமங்கலம், பவானி, ஈரோடு உட்பட பல்வேறு இடங்களில் நகைப்பறிப்பு, வழிப்பறி குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
முதலில் தனது நண்பர் கமலக்கண்ணனை துணைக்கு சேர்த்துக் கொண்டதாகவும், பின்னர் அடுத்தடுத்து மற்றவர் களையும் சேர்த்துக் கொண்ட தாகவும், தனது வாக்குமூலத்தில் சரண் தெரிவித்துள்ளார்.
இதேபோல், மற்றொரு குற்றச் சம்பவத்தில் கைதான அபிஷேக் குமார், இம்மானுவேல் ஆகியோர் வாட்ஸ்-அப் குழுவை தொடங்கியுள்ளனர். அதில் ஆடம்பரமாக வாழ நினைக்கும் இளைஞர்களை சேர்த்து, வழிப்பறியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்’’ என்றனர்.
