கோயில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம்: மேட்டுப்பாளையம் அருகே இன்று தொடங்குகிறது

மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் இன்று தொடங்கும் முகாமுக்காக லாரியில் கொண்டுவரப்பட்ட கோயில் யானை.
மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் இன்று தொடங்கும் முகாமுக்காக லாரியில் கொண்டுவரப்பட்ட கோயில் யானை.
Updated on
1 min read

மேட்டுப்பாளையம் அருகே இன்று (டிச.15) தொடங்க உள்ள கோயில் யானைகளுக்கான புத்து ணர்வு நலவாழ்வு முகாமில் பங்கேற் பதற்காக, பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்கள் மற்றும் மடங்க ளில் உள்ள யானைகள், லாரிகளில் அழைத்து வரப்பட்டன.

தமிழக அரசின் இந்து சமய அற நிலையத் துறை சார்பில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற் றங்கரை பகுதியில், 48 நாட்களுக்கு கோயில் யானைகள் புத்துணர்வு முகாம் நடைபெற உள்ளது. இதில், அறநிலையத் துறையின் கட்டுப் பாட்டிலுள்ள கோயில்கள் மற்றும் மடங்களுக்கு சொந்தமான 28 யானைகள் பங்கேற்க உள்ளன.

பவானி ஆற்றங்கரையில் பொதுப் பணித் துறைக்கு சொந்த மான 5 ஏக்கரில் நடைபெற உள்ள இந்த முகாமுக்காக, தமிழக அரசு ரூ.1.40 கோடி ஒதுக்கியுள்ளது. முகாமில் யானைகள் மற்றும் பாகன் கள் தங்குமிடங்கள், உணவுக் கூடங் கள், யானைகள் நடை பயிற்சி மற்றும் குளிக்க வைக்கப்படும் பகுதி கள் சீரமைக்கப்பட்டுள்ளன.

பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்கள் மற்றும் மடங்களில் இருந்து லாரிகள் மூலமாக யானை கள் கொண்டுவரப்பட்டன. முதல் யானையாக, வில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் யானை ஜெய மாலிகா வந்தடைந்தது. அதைத் தொடர்ந்து, பிற கோயில்களின் யானைகளும் முகாமுக்கு வந்தன.

யானைகளின் எடை குறிக்கப் பட்டு, வயதுக்கேற்ற எடையில் உள்ளதா, முகாம் நாட்களில் அவற் றின் எடையை அதிகரிக்க வேண் டுமா அல்லது குறைக்க வேண்டுமா என முடிவெடுத்து, அதன்படி உணவு, பயிற்சி அளிக்கப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in