குருசாமிபாளையத்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் வீட்டின் முன்பு திரண்டிருந்த கிராம மக்கள்.
குருசாமிபாளையத்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் வீட்டின் முன்பு திரண்டிருந்த கிராம மக்கள்.

ராசிபுரம் அருகே நள்ளிரவில் பரபரப்பு; பெண்ணை கொன்று தப்பிய ரவுடி உயிரிழப்பு: ஆசிட் வீசியதில் 22 பேர் காயம், போலீஸ் துப்பாக்கிச் சூடு

Published on

ராசிபுரம் அருகே நள்ளிரவில் வயதான பெண்ணை வெட்டிக் கொலை செய்தபோது, பிடிக்க வந்த போலீஸார், பொதுமக்கள் மீது ஆசிட் ஊற்றிவிட்டு தப்பிய ரவுடியை பொதுமக்கள் தாக்கினர். காயத்துடன் ஓடிய ரவுடி தவறி விழுந்ததில் படுகாயமடைந்த உயிரிழந்தார். ஆசிட் ஊற்றியதில் 2 எஸ்.ஐ. உட்பட 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்தனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள குருசாமிபாளையத் தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவ ரது மனைவி விஜயலட்சுமி. இவர் களுக்கு 3 மகள்கள் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் சாலை விபத்தில் ரவிச்சந்திரன் உயிரிழந் தார். இந்நிலையில், தருமபுரியைச் சேர்ந்த பிரபல கொள்ளை கும்பல் தலைவன் ரவுடி சாமுவேல் (41) என்பவருக்கும், விஜயலட்சுமிக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் தருமபுரியில் வசித்து வந்தனர். விஜயலட்சுமியுடன் வசிக்க மனமில்லாத அவரது 3 மகள்களும், தாயைப் பிரிந்து குருசாமிபாளையத்தில் உள்ள தங்கள் பாட்டி தனம்மாள் (65) வீட்டில் வசித்து வருகின்றனர். மேலும், மூவரும் அங்குள்ள பள்ளி, கல்லூரியில் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சாமுவேல் (41), தனம்மா ளின் வீட்டுக்கு சென்றுள்ளார். கல் லூரியில் படிக்கும் விஜயலட்சுமி யின் மகளை தன்னுடன் அனுப்பி வைக்கும்படி பாட்டி தனம்மாளிடம் கூறியுள்ளார். பேத்தியை அனுப்ப மறுத்ததால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சாமுவேல், அரிவாளால் தனம்மாளை வெட்டி யுள்ளார்.

அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் தனம் மாளை மீட்க முயன்றனர். அவர் கள் மீது ஆசிட் ஊற்றி விடுவதாக சாமுவேல் மிரட்டினார். மேலும், தகவல் அறிந்து அங்கு வந்த போலீ ஸார் மீதும் ஆசிட் ஊற்றுவதாக கூறி மிரட்டியுள்ளார். இதனால், சாமு வேலை கிராம மக்கள் மற்றும் போலீ ஸாரால் நெருங்க முடியவில்லை.

இதற்கிடையே தனம்மாளை, சாமுவேல் மேலும் வெட்டியதால் அவர் அதே இடத்தில் உயிரிழந்தார். இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாமுவேலை கல்லால் தாக்கி பிடிக்க முயன்றனர். அப்போது மக் கள் மற்றும் போலீஸ் மீதும் ஆசிட் ஊற்றி சாமுவேல் தப்ப முயன்றார்.

காயமடைந்திருந்த சாமுவேல் தப்பி ஓடும்போது நிலைதடுமாறி விழுந்ததில் அதே இடத்தில் உயிரி ழந்தார். இதற்கிடையே சாமுவேல் ஆசிட் வீசியதில் புதுச்சத்திரம் எஸ்.ஐ. முருகானந்தம், எஸ்.எஸ்.ஐ. கார்த்திகேயன் ஆகிய இருவர் பலத்த காயமடைந்தனர். மேலும், 20-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் காயமடைந்தனர். பொதுமக்க ளுக்கு நாமக்கல் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப் படுகிறது. பலத்த காயமடைந்த எஸ்.ஐ.க்கள் முருகானந்தம், கார்த் திகேயன் ஆகியோர் கோவை தனி யார் மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட எஸ்.பி. அருளரசு கூறியதாவது: சாமுவேல் மீது தருமபுரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் குற்ற வழக்குகள் உள்ளன. இவரை தரும புரி மாவட்ட போலீஸார் தேடி வந்த னர். இந்நிலையில் தனம்மாளின் பேத்தியை கடத்திச் செல்ல சாமு வேல் திட்டமிட்டுள்ளார். மது போதையில் இருந்த சாமுவேல் மூதாட்டியை பிணைக் கைதியாக வைத்துக்கொண்டு பேத்தியை வரவழைக்க முயற்சி செய்துள்ளார்.

இந்த முயற்சி தோல்வியில் முடியவே மூதாட்டியை கொன்று விட்டு தப்பிக்க முயன்றபோது மக்கள் கல்லால் தாக்கியுள்ளனர். காயமடைந்த நிலையில் ஓடிய சாமு வேல் நிலை தடுமாறி விழுந்ததில் படுகாயமடைந்தார். மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார் என்றார்.

இதுகுறித்து, புதுச்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விஜயலட்சுமியை தேடிவருகின்ற னர்.

நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீ ஸார் கூறும்போது, தருமபுரியைச் சேர்ந்த கொள்ளையன் சாமுவேல், பெண்களை வைத்து பாலியல் தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் தன்னுடன் இருக்கும் விஜயலட்சுமியின் மகளையும் பாலி யல் தொழிலில் ஈடுபடுத்த முற்பட் டுள்ளார். இதற்கு விஜயலட்சுமியும் உடந்தையாக இருந்ததால், அவரது 3 மகள்களும் குருசாமிபாளையத் தில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளனர்.

அவர்களை தன்னுடன் அனுப்பி வைக்கும்படி கூறி சாமுவேல் அடிக் கடி தகராறில் ஈடுபட்டு வந்தது விசார ணையில் தெரியவந்தது. ஆசிட் ஊற்றுவதாக கூறி மிரட்டிய சாமு வேலை ஒரு கட்டத்தில் துப்பாக்கி யால் சுட்டுப் பிடிக்க போலீஸார் முற்பட்டனர். 2 முறை சுட்டும் அவர் தப்பியதாக என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in