

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு உயர் நீதி மன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. நாளை முதல் 5 நாட் களுக்கு தொடர்ச்சியாக விசா ரணை நடைபெறும்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர் லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக் கோரி ஆலை நிர் வாகம், சென்னை உயர் நீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி கள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வில் ஏற்கெனவே நடந்தது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.எஸ்.சிவ ஞானம் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டதால், இந்த வழக்கை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானமும், தாரணியும் மதுரை கிளையில் விசாரிப்பர் என அப்போதைய தலைமை நீதிபதி தஹில் ரமானி உத்தரவிட் டார். இதற்கு ஆட்சேபம் தெரிவித்து மனுக்கள் அளிக்கப்பட்டன.
இந்நிலையில் தஹில் ரமானி ராஜினாமா செய்ததால், பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி இந்த வழக்கை மீண்டும் நீதிபதி கள் டி.எஸ்.சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கும் என உத்தரவிட்டார். இந்த வழக்கு நாளை முதல் இதே அமர்வில் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு விசாரணைக்கு வரவுள்ளது.