Published : 15 Dec 2019 08:33 AM
Last Updated : 15 Dec 2019 08:33 AM

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் முதல்கட்ட பட்டியல் வெளியீடு

உள்ளாட்சி தேர்தலையொட்டி, திமுகவில் அமைப்பு ரீதியிலான 14 மாவட்ட வேட்பாளர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

இதுதொடர்பாக திமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

டிசம்பர் 27, 30-ம் தேதிகளில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் தொடர்ந்து நடந்து வருகிறது. திமுக தலைமையி லான கூட்டணிக் கட்சிகள் சார் பில் போட்டியிடும் வேட்பாளர் களுக்கான கலந்தாலோசனை அந்தந்த மாவட்ட திமுக சார்பில் நடைபெற்று வருகிறது.

கட்சி நிர்வாக அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ள மாவட்டவாரி யாக தற்போதுவரை, திருவண்ணா மலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, கரூர், சேலம் மத்திய, சேலம் மேற்கு, கோவை தெற்கு, நீலகிரி, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, கன்னியா குமரி கிழக்கு ஆகிய மாவட்டங் களில் கூட்டணிக் கட்சியினருடன் சேர்ந்து சுமுக முடிவெடுக்கப்பட்டு, தலைமைக் அலுவலகத்தின் ஒப்புதலோடு, அந்தந்த மாவட்டக் கழகங்களின் சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள் கிறோம்.

மற்ற மாவட்டங்களில் தோழ மைக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைந்து அந்தந்த மாவட்டக் கழகங்கள் சார்பில் பட்டியல் வெளியிடப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x